மூன்று நிமிடக் காணொளி சந்திப்பில் 900 பேரைப் பணிநீக்கம் செய்த நிறுவனம்

வா‌ஷிங்­டன்: 900 ஊழி­யர்­களை 'ஸும்' எனும் காணொளி சந்­திப்­பிற்கு அழைத்­தி­ருந்­தார் பெட்­டர்.காமின் தலைமை நிர்­வாக அதி­காரி. ஆனால் அது வேலை­யைப் பற்றி பேசு­வ­தற்­காக அல்ல, வேலை­யை­விட்டு நீக்­கு­வ­தற்­காக என்­பதை அறிந்து ஊழி­யர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

பெட்­டர்.காம் நிறு­வ­னத்­தின் தலை­வ­ரான இந்­திய அமெ­ரிக்­க­ரான விஷால் கார்க் இந்­தப் பணி நீக்­கத்­துக்­கான கார­ண­மாக சந்தை நில­வ­ரம், செயல்­தி­றன் ஆகி­ய­வற்­றைக் குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பின்போது ஊழியர்களிடம் பேசிய அவர், "இந்த காணொளி சந்­திப்­பில் இடம்­பெற்­றுள்ள 900 பேரும் பணி நீக்­கம் செய்­யப்­ப­டு­கி­றீர்­கள்," என்­றார்.

பெட்­டர்.காமின் ஊழி­யர்­களில் இவர்­கள் 9 விழுக்­காட்­டி­னர் ஆவர்.

விஷால் கார்க் இரக்­க­மின்றி வெளி­யிட்ட இந்த அறி­விப்பை ஊழி­யர் ஒரு­வர் சமூக வலைத்

­த­ளத்­தில் பதிவு செய்­த­தை­ய­டுத்து, விஷால் கார்கை இணை­ய­வா­சி­கள் மிகக் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­ற­னர்.

இந்த பணி நீக்­கம் குறித்து டெய்லி மெயில் பத்­தி­ரி­கைக்கு அவர் அளித்த பேட்­டி­யில்,

"3 நிமிட சந்­திப்­பில் 900 பேரைப் பணி நீக்­கம் செய்­வது என்­பது மிக­வும் சவா­லான ஒரு விஷ­யம். இதை நான் இரண்­டா­வது முறை­யாக செய்­கி­றேன்.

"ஊழி­யர்­களில் சிலர் சோம்­

பே­றி­யா­க­வும் ஆக்­க­பூர்­வ­மா­க­வும் இல்லை. சுமார் 250 ஊழி­யர்­கள் வெறும் 2 மணி நேரம் மட்­டுமே வேலை செய்­வது தெரி­ய­வந்­தது," என்­றார் அவர்.

இதற்கு முன்­பும் ஒரு­முறை ஊழி­யர்­க­ளைப் பணி­நீக்­கம் செய்­த­போது வி‌ஷால் அனுப்­பிய மின்­னஞ்­ச­லில், "நீங்­கள் படு­மந்­த­மாக இருக்­கி­றீர்­கள். நீங்­கள் என்னை தர்­ம­சங்­க­டத்­துக்கு ஆளாக்­குகிறீர்­கள்.

"உங்­கள் பணியை இத்­தோடு முடித்­துக் கொள்­ளுங்­கள்," என்று குறிப்­பிட்­டி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!