கிருமித்தொற்றுக்கு ஆளான பிள்ளைகள் அழற்சியால் பாதிக்கப்படும் வாய்ப்பு

ஜெரு­ச­லம்: கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடங்கி இரண்டு ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில், அது பிள்­ளை­க­ளிடையே எந்­த­வி­த­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது என்­பதை மருத்­து­வர்­கள் தொடர்ந்து கண்­ட­றிந்து வரு­கின்­ற­னர்.

கடு­மை­யான பாதிப்­பும் உயி­ரி­ழப்­பும் பெரி­ய­வர்­க­ளை­விட தொற்­றுக்கு ஆளான பிள்­ளை­க­ளி­டம் மிக­வும் குறை­வா­கவே உள்­ளது.

இருப்­பி­னும் தொற்­றுக்கு ஆளான பல்­லா­யி­ரக்­க­ணக்­கான குழந்­தை­கள் அதன் தாக்­கத்­தோடு போரா­டு­வ­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

கிரு­மித்­தொற்­றின் தாக்­கத்­தால் 'பிஐ­எம்­எஸ்' எனும் குழந்தை அழற்­சி­யா­லும் வார அல்­லது மாதக்­

கணக்­கில் நீடிக்­கும் நீண்­ட­கால கொவிட்-19 அறி­கு­றி­க­ளா­லும் பிள்ளைகள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

தொற்­றுக்கு ஆளான பிள்­ளை­களில் 0.1 விழுக்­காட்­டிற்­கும் குறை­வா­ன­வர்­களே அழற்­சி­யால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். அவர்­களில் மோச­மாக பாதிக்­கப்­ப­டுப­வர்­கள் மிக­வும் குறைவு.

அமெ­ரிக்­கா­வில் 10,000 பிள்­ளை­களில் மூவ­ருக்­கும் ஐரோப்­பிய, இஸ்­ரே­ல் ஆகிய நாடுகளின் புள்ளி ­வி­வ­ரங்­கள்­படி, 3,500 பிள்­ளை­களில் ஒரு­வ­ருக்கும் அழற்­சி நோய் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாகக் கூறப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் தொற்­றுக்கு ஆளான 8,000 பிள்ளைகளில் ஆறு பேர் அழற்­சி­யால் பாதிக்­கப்­பட்­ட­தா­க சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.

பிள்­ளை­கள் தொற்­றுக்கு ஆளான சில வாரங்­களில், 'பிஐ­எம்­எஸ்' தாக்­கக்­கூ­டும்.

அதிக காய்ச்­சல், சொறி, தடிப்பு ஏற்படுதல் போன்­றவை அழற்­சிக்­கான அறி­கு­றி­க­ளா­கும்.

இதி­லி­ருந்து குண­ம­டைந்த பிள்­ளை­கள் மனச் சோர்­வா­க­வும் உடல் பல­வீ­ன­மா­க­வும் காணப்­படலாம். எனினும் காலப்­போக்­கில் அவை சரி­யா­கி­வி­டு­வ­தாக மருத்து ­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!