நியூயார்க்: உலகளவில் செய்தியாளர்கள் சிறைக்குச் செல்வது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக அதிகரித்துள்ளதாக நியூயார்க்கை அடிப்படையாக கொண்ட கண்காணிப்புக் குழுவான செய்தியாளர்கள் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்த ஆண்டு 293 செய்தியாளர்கள் சிறை சென்றுள்ளனர். சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 280ஆக இருந்தது.
"சிறையில் அடைக்கப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டின் மாறுபட்ட சூழ்நிலையைப் பிரதிபலிக்கிறது.
"ஆனால் அச்சுறுத்தலாகக் கருதப்படும் தகவல்களைப் பகிரங்கமாக வெளியிடுவதை, சர்வாதிகார அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாதது பொதுவான விஷயமாக உள்ளது," என்றார் அறிக்கையை வெளியிட்டு பேசிய குழுவின் நிர்வாக இயக்குனரான திரு ஜோயல் சைமன்.
மற்ற நாடுகளைவிட அதிகமாக சீனா 50 செய்தியாளர்களைச் சிறைக்கு அனுப்பியுள்ளது.

