உலகம் முழுவதும் 4,400 விமானச் சேவைகள் ரத்து

புத்தாண்டு தினமான நேற்று, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 4,400 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அவற்றில் 2,500க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டதாக விமானச் சேவையைக் கண்காணிக்கும் இணையத்தளமான ‘ஃபிளைட்அவேர்’ குறிப்பிட்டது.

கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக, கிறிஸ்மஸ் விடுமுறையின்போது அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது.

கொவிட்-19 தொற்றிய விமானப் பணியாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்ததால், ஊழியர் பற்றாக்குறையால் விமான நிறுவனங்கள் அவதியுறுகின்றன.

இதுபோக, மத்திய அமெரிக்காவை கடுமையான பனி சூழ்ந்துள்ளது.

“ஓமிக்ரான் மற்றும் வானிலை நிகழ்வுகளால் விமானச் சேவைகளை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. ரத்து செய்யப்பட்டுள்ள விமானச் சேவைகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளை முன்கூட்டியே தொடர்புகொண்டு அவர்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறோம்,” என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.

டிசம்பர் 24ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவில் 12,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ஊழியர் தட்டுப்பாட்டைக் கையாள, கூடுதல் சம்பளம் கொடுத்து பணியாளர்களை ஈர்க்கும் முயற்சியில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், தங்களை கொவிட்-19 தொற்றிவிடுமோ என்பது குறித்தும் விரக்தி அடைந்துள்ள பயணிகளைக் கையாளுவது குறித்தும் விமானப் பணியாளர்கள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.

ஓமிக்ரான் திரிபு வேகமாக உயர்ந்து வரும் சூழலை அமெரிக்கா எதிர்கொள்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!