மருத்துவமனையில் அதிகமானவர்கள் சேர்ப்பு

சிட்னி: கிருமித் தொற்­றைச் சகித்­துக்­கொண்டு வாழத் தொடங்­கி­யுள்ள ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நேற்று முன்­தி­னம் 30,000த்திற்­கும் அதி­க­மான தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

கிரு­மி தொற்­றி­ய­வர்­கள் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தா­லும், மருத்­து­வ­ம­னை­யில் இருப்­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யையே ஆஸ்­தி­ரே­லியா கண்­கா­ணித்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில், நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் 18,278 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

ஆனால் அங்கு மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு உள்ளோர் விகி­தம் 18 விழுக்­காடு உயர்ந்­துள்­ளது.

ஓமிக்­ரான் பர­வலை மட்­டுப்­படுத்­து­வ­து­தான் சுகா­தார அமைப்பு மீதான நெருக்­க­டி­யைக் குறைக்­கும் என்­றார் அர­சாங்க அதி­கா­ரி­யான டிக்.

எனவே, மக்­க­ளைத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வும் முகக்­க­வ­சம் அணி­வது போன்ற கட்­டுப்­பா­டு­க­ளைக் கடை­ப்பி­டிக்­கு­மா­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

கூடு­மா­ன­வரை அனைவரும் வீட்­டில் இருந்து வேலை செய்­ய­வும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.

இதற்­கி­டையே, தாய்­லாந்து நாட்­டின் தலை­ந­க­ர­மான பேங்­காக்­கில் பொழு­து­போக்குக் கூடங்­கள், மது­பா­னக் கூடங்­கள் உள்­ளிட்­ட­வற்றுக்கு ஜன­வரி 15ஆம் தேதி வரை தடை­ வி­திக்­கப்­பட்­டு

உள்­ளது.

தாய்­லாந்­தில் அதி­க­ரித்து வரும் ஓமிக்­ரான் பர­வ­லைச் சமா­ளிக்­கும் வகை­யில் இந்த நட­வடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தாய்­லாந்து சுகா­தார அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!