கொட்டித் தீர்க்கும் மழை; வெள்ள நிவாரண மையங்களை நாடுவோர் எண்ணிக்கை உயர்வு

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் தொடர்ந்து பெய்­யும் கன­ம­ழை­யால் தாழ்­வான பல பகு­தி­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. இத­னால் தங்­கள் வசிப்­பி­டங்­க­ளை­விட்டு வெள்ள நிவா­ரண மையங்­க­ளுக்­குச் செல்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

சாபா­வில் உள்ள தெலு­பிட், சன்­டக்­கான் ஆகிய மாவட்­டங்­களும் வெள்­ளத்­தில் தத்­த­ளிக்­கின்­றன. இந்த மாவட்­டங்­களில் வசிக்­கும் 212 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 717 பேர் வெள்ள நிவா­ரண மையங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அது போல் ஜோகூர் மாநி­லத்­தின் கோத்தா திங்­கி­யில் 2,022 பேர் தங்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­யே­றி­யுள்­ள­னர்.

கோத்தா திங்­கி­யில் மேலும் இரண்டு நிவா­ரண மையங்­கள் திறக்­கப்­பட்­டுள்­ளன. ஜோகூர் மாநி­லத்­தி­லேயே சிகா­மட் பகு­தி­யில் ஆக அதிக அளவு மழை பதி­வா­கி­யுள்­ளது. அங்கு டிசம்­பர் 26 முதல் நேற்று முன்­தி­னம் வரை நாளொன்­றுக்குச் சரா­ச­ரி­யாக 213 மி.மீ. மழை பதி­வா­கி­யது. மலாக்­கா­வி­லும் கூடு­தல் நிவா­ரண மையங்­கள் திறக்­கப்­படும் என கூறப்­பட்­டுள்­ளது.

மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தின் பெரும்­பா­லான மாவட்­டங்­கள், பாகாங்­கின் சில மாவட்­டங்­கள், கிளந்­தான், திரெங்­கானு ஆகிய இடங்­களில் நாளை வரை தொடர்­மழை பெய்­யக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, எதிர்­கா­லத்­தில் வெள்­ளத்­தைச் சமா­ளிக்­கும் பொருட்டு, மலே­சி­யா­வில் ஆறு­கள், முக்­கிய வடி­கால்­களை ஆழப்­ப­டுத்­து­வதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்கோப் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!