ஹனோய்: வியட்னாமின் எல்லையை ஒட்டியுள்ள சீனாவின் குவாங்ஸி மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து சென்றவருக்குத் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து,
எல்லையில் தங்களது ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வர்த்தகம் தடைபட்டுள்ளதாக வியட்னாம் கூறியது.
கிருமித் தொற்றைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் சீனா, பழங்கள் இறக்குமதியை நிறுத்துவது போன்ற அதிகப்படியான கட்டுப்பாடுகள் தேவையற்றது என்று வியட்னாம் கூறியது.