ஜோக்கோவிச்சுக்கு தடுப்பூசி விலக்கு; ஆஸ்திரேலியர்கள் கொதிப்பு

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லிய டென்­னிஸ் பொது விரு­துப் போட்­டி­யில் பங்­கேற்­கும் உல­கின் தலை­சி­றந்த டென்­னிஸ் வீரர்­களில் ஒரு­வ­ரான செர்பியாவின் நோவக் ஜோக்கோ­விச்­சுக்கு தடுப்­பூசி போடு­வ­தி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்டதால் ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் கொதிப்­ப­டைந்­துள்­ள­னர்.

பொது ­வி­ரு­துப் போட்­டி­யில் பங்­கேற்­கும் டென்­னிஸ் வீரர்­கள், பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் அனை­வ­ரும் கட்­டா­யம் தடுப்­பூசி போட வேண்­டும் அல்­லது நிபு­ணர் குழு­வால் விலக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜோக்கோ­விச்­சுக்கு நாங்கள் சிறப்­புச்சலுகை எதுவும் காட்ட வில்லை என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

பொது ­வி­ரு­துப் போட்­டி­யின் தலை­வ­ரான கிரேய்க் டிலே, 26, மருத்­து­வக் கார­ணங்­க­ளுக்­காக தடுப்­பூசி விலக்­குக் கேட்ட ஜோகோ­விச் உள்­ளிட்ட சில வீரர்­க­ளுக்கு மத்­திய அரசு வழி­காட்டலின்கீழ் விலக்கு அளிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளார். ஆனால் மாநி­லங்­க­ளுக்கு இடையேயும் வெளி­நாட்­டுக்கும் பயணம் மேற்கொள்ள முடியாமல் தவிக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யர்­கள், ஜோக்கோவிச் விவகாரத் தில் அதி­கா­ரி­கள், அர­சி­யல்­வா­தி­கள் மற்­றும் ஜோக்கோ­விச்சையும் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் ேமாரி­சன், "விக்­டோ­ரிய மாநில அர­சாங்­கம் அவர் ஆஸ்­தி­ரே­லியா வரு­வ­தற்கு விலக்கு அளித்­துள்­ளது. அதற்கேற்ப நாங்­களும் செயல் ­ப­டு­கி­றோம்," என்று கூறி­யுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!