காரை ஓரங்கட்டி நிறுத்தும் முயற்சி தோல்வியுற்றதால் கைகளாலேயே காரை இழுத்து ஓரங்கட்டினார்

ஓட்டுநர் உரிமம் பெற்றபின் காரை ‘பார்க்’ பண்ணுவது அவ்வளவு சிரமமாக இருக்காது என நாம் நினைக்கலாம். ஆனால், சிலருக்கு அது மலையில் ஏறுவதுபோன்ற காரியமாக உள்ளது.

சீனாவில் உள்ள ஆடவர் ஒருவருக்கு அத்தகைய சவால் ஒன்று ஏற்பட்டது. ஆனால், மலைபோன்ற எடையுடைய தமது காரை அவர் கைகளால் இழுத்தே ஓரங்கட்டுவதைக் காட்டும் காணொளிக் காட்சி, அங்கிருந்த சிசிடிவி கருவியில் பதிவானது.

வூஸோவ் எனும் பகுதியில் உள்ள ஒடுக்கமான சாலைக்குள் வாகனத்தை ஓட்டிய அந்த ஆடவர், சாலையோரம் காரை நிறுத்துவதற்கான சிறியதோர் இடத்தைக் கண்டார்.

ஓட்டுநர் இருக்கையில் இருந்தவாறு எத்தனை முறையும் காரை ‘பார்க்’ பண்ண அவர் முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த அந்த ஓட்டுநர், காரை விட்டு இறங்கி நின்றார். அதற்கு அடுத்ததாக அவர் செய்த காரியம், புருவங்களை உயர்த்த வைக்கிறது.

தமது முழு பலத்தையும் பயன்படுத்திய அவர், கைகளாலேயே காரை இழுத்து ஒருவழியாக ஓரங்கட்டிவிட்டார்.

இறுதியாக முயற்சிக்குப் பலன் கிடைத்துவிட்டதை எண்ணி, ஒரு வெற்றியாளர்போல கைகளை உயர்த்தி கொண்டாடிவிட்டு அந்த இடத்தைவிட்டு நடந்து சென்றுவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!