பிரேசிலில் மலை முகடு உடைந்ததில் படகுகள் சிக்கின; 7 பேர் பலி

பிரேசிலில் உள்ள ஏரி ஒன்றில் மலை முகட்டின் ஒரு பகுதி பெயர்ந்து அருகிலிருந்த படகின்மீது விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் மாண்டனர்.

மூன்று பேரைக் காணவில்லை.

சம்பவத்தில் 32 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 9 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மினாஸ் ஜெரேய்ஸ் மாநிலத்தில் உள்ள ஃபர்னாஸ் ஏரியில் அந்தச் சம்பவம் சனிக்கிழமை (ஜனவரி 8) அன்று நிகழ்ந்தது.

அந்தப் பெரிய பாறை மூன்று படகுகளின் மீது விழுந்ததைக் காணொளிகள் (இங்கே பார்க்கலாம்) காட்டின.

பிரேசில் கடற்படையினர், முக்குளிப்பாளர்கள் உள்ளிட்ட மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வேறு சில காணொளிகள், மலை முகட்டிலிருந்து சிறிய பாறைகள் விழுந்ததையும் அருகில் இருந்த படகுகளில் இருந்தவர்களை மற்ற படகுகளில் இருந்தோர் சத்தமிட்டு எச்சரித்ததையும் காட்டின.

பிரேசிலின் தென்கிழக்கு வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்ததாகவும் பாறை பெயர்ந்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தீயணைப்பாளர்கள் கூறினர்.

ஃபர்னாஸ் ஏரியைச் சுற்றியுள்ள பாறைகள், குகைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றைக் காண வரும் சுற்றுப்பயணிகள் அதிகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!