ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்த அச்சம்

கோலா­லம்­பூர்: ஈராக்­கும் சிரி­யா­வும் ஐஎஸ்­ஐஸ் பயங்­க­ர­வா­தி­க­ளின் பிடி­யில் இருந்­த­போது 100க்கும் அதி­க­மான மலே­சி­யர்­கள் அந்த அமைப்பு ஈடு­பட்­டி­ருந்த போரில் பங்­கேற்­ற­னர். தங்­க­ளின் பங்­கேற்­பைப் பற்றி பலர் சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் தெரி­யப்­படுத்­தி­னர். தற்­போ­தைய நில­வ­ரப்­படி ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்பு தோல்­வி­ய­டைந்­துள்­ளது. 16 மலே­சி­யர்­கள் திருப்பி அனுப்­பப்­பட்­டுள்­ள­னர். 50க்கும் அதி­க­மான மலே­சி­யர்­களும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ரும் இன்­ன­மும் சிரி­யா­வின் அக­தி­கள் முகாம்­களில் இருக்­கின்­ற­னர். வேறு சில­ரின் இருப்­பி­டம் குறித்து தக­வல் ஏதும் இல்லை. அக­தி­கள் முகாம்­களில் இருப்­போர், இருக்­கு­கு­மி­டம் தெரி­யா­தோர் ஆகி­யோ­ரின் எண்­ணிக்கை 56 என்று மலே­சி­யக் காவல்­து­றை­யி­னர் அடை­யா­ளம் கண்டுள்­ள­னர். 50க்கும் மேற்­பட்ட நாடு­களைச் சேர்ந்த ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வா­தி­கள் வட­கி­ழக்கு சிரி­யா­வின் அல்-ஹொல் அக­தி­கள் முகா­மில் இருக்­கின்­ற­னர்.

"சிரி­யா­வின் ஜன­நா­ய­கப் படை­கள் (எஸ்­டிஐ) அமைப்­பின் கட்­டுப்­பாட்­டில் உள்ள முகாம்­களில் மலே­சி­யர்­கள் இருக்­கின்­ற­னர், அர­ச­தந்­திர ரீதி­யாக மலே­சிய அர­சாங்­கம் அந்த அமைப்பை அங்­கீ­க­ரிக்­கா­த­தால் இது அதி­கா­ரி­க­ளுக்­குப் பெரிய சவா­லாக அமைந்­துள்­ளது.

"அந்த முகாம்­கள் பயங்­க­ர­வாத மனப்­போக்கு தாண்­ட­வ­மா­டு­ப­வை­யாக இருப்­ப­தால் தங்­கள் நாட்­டிற்­குத் திருப்பி அனுப்­பப்­ப­டா­தோர் பயங்­க­ர­வாத சித்­தாந்­துக்கு மேலும் ஈர்க்­கப்­பட்டு சமு­தா­யத்­திற்­குள் நுழைய முயற்­சி­செய்­ய­லாம்," என்று அண்­மை­யில் வெளி­யான ஓர் அறிக்கை குறிப்­பிட்­டது. 2019ஆம் ஆண்­டி­லி­ருந்து சுமார் 40 மலே­சி­யர்­க­ளைத் தங்கள் நாட்டிற்குக் கொண்­டு­வர அந்­நாட்டு அர­சாங்­கம் வெளி­நாட்டு அமைப்­பு­க­ளு­டன் இணைந்து செயல்­பட்டு வந்­தது. அந்த எண்­ணிக்கை குறைந்து வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!