ஆஸ்திரேலியாவில் வெளியிடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கும் மக்கள்

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மருத்து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை தற்­போது குறைந்­துள்­ளது. இது அங்கு ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பெரு­ம­ள­வில் குறைந்­துள்­ள­தைக் காட்­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சென்ற வாரம், 5,400 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­னர். நேற்று அந்த எண்­ணிக்கை 4,600ஆக இருந்­தது.

நேற்று அங்கு புதிதாக 40,000 பேரைக் கிருமி தொற்றியது. 70 பேர் மாண்டுவிட்டனர்.

ஈஸ்­டர் பண்­டி­கைக்கு முன்பு, வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கு எல்லை திறக்­கப்­படும் என்று சென்ற வாரம் அவர் நம்­பிக்­கைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக, பல்­வேறு முடக்­க­நிலை உத்­த­ர­வு­களை கண்ட ஆஸ்­தி­ரே­லியா, ஓமிக்­ரான் பர­வ­லின்­போது அர­சாங்­கம் முடக்­க­நிலை எதை­யும் அறி­விக்­க­வில்லை. கட்­டுப்­பா­டு­களும் கடு­மை­யாக்­கப்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும், அங்கு வர்த்­த­கங்­களும் தொழில்­களும் பெரு­ம­ளவு பாதிக்­கப்­பட்­டன. ஏனெ­னில் ஓமிக்­ரான் பர­வல் கார­ண­மாக, பெரும்­பா­லான ஆஸ்­தி­ரே­லிய மக்­கள் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற தேவை­க­ளுக்கு வெளியே செல்­வ­தைத் தவிர்த்­த­னர். வேலை­யி­டங்­க­ளுக்­குச் செல்­வ­தை­யும் கூட்­ட­மான இடங்­க­ளுக்­குச் செல்­வ­தை­யும் தவிர்த்­த­னர். இத­னால் அங்கு சாலை­கள், கடை­கள் வெறிச்­சோடி காணப்­பட்­டன.

சிட்­னி­யில், சில்­லறை வர்த்­த­கம், சேவை, பொழு­து­போக்­குக் கூடங்­களுக்­குச் செல்­வோர் எண்­ணிக்கை 42 விழுக்­காடாக குறைந்­து­விட்­ட­தா­க­வும் பொதுப் போக்­கு­வ­ரத்­தின் பயன்­பாடு 51 விழுக்­காடு குறைந்து­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!