ஜப்பானில் சிறார் துன்புறுத்தல் சம்பவங்கள் புதிய உச்சம்

தோக்­கியோ: ஜப்­பா­னில் சென்ற­ஆண்டு 2,000க்கும் மேற்­பட்ட சிறார் துன்­பு­றுத்­தல் சம்­ப­வங்­கள் விசா­ரிக்­கப்­பட்­டன. இந்த எண்­ணிக்கை அதற்கு முந்­தைய ஆண்டைவிட 1.7 விழுக்­காடு அதி­கம் என அந்­நாட்­டின் தேசிய காவல் துறை தெரி­வித்­தது.

அதோடு, துன்­பு­றுத்­த­லால் பாதிக்­கப்­பட்டு, சிறார் நல இல்­லங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை 100,000க்கும் மேலாக இருந்­ததாகக் கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, இந்த எண்­ணிக்கை ஒரு விழுக்­காடு அதி­கம்.

கிருமித்தொற்று கார­ணத்­தால், சிறு­வர்­களை எளி­தாக அணுக முடி­யாத இக்­கட்­டான சூழ்­நி­லை­யில் அந்­நாட்­டின் சிறார் நல அதி­கா­ரி­கள் உள்­ள­னர்.

இருந்­தா­லும், ஏதே­னும் துன்­

பு­றுத்­தல் சம்­ப­வம் குறித்து தங்­க­ளுக்­குக் தக­வல் கிடைத்­தால், அது விசா­ரிக்­கப்­படும் எனக் காவல் துறை தெரிவித்தது.

இதற்­கி­டையே, ஒட்­டு­மொத்த குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை சென்ற ஆண்டு குறைந்­த­தாக காவல்துறை கூறி­யது. கொலை, கொள்ளை, கடத்­தல் உள்­ளிட்ட சுமார் 568,000 குற்­றங்­கள் பதி­வா­கின. ஏழு ஆண்டு­களில் பதி­வான ஆகக் குறை­வான எண்­ணிக்கை இது எனக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!