தென்கொரியாவில் மோசமடையும் கிருமிப் பரவல்

சோல்: தென்­கொ­ரி­யா­வில் அன்­றாட கொவிட்-19 பாதிப்பு புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது. ஓமிக்­ரான் கிருமி வகை தலை­தூக்­கி­யதை அடுத்து, அந்­நாட்­டில் முதல்­மு­றை­யா­கப் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 22,000ஐ தாண்­டி­உள்­ளது.

நேற்­றைய நில­வ­ரப்­படி தென்­கொ­ரி­யா­வில் 22,907க்கும் அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக தென்­கொ­ரிய நோய் கட்­டுப்­பாடு, தடுப்பு ஆணை­யம் கூறி­யது.

இதன்­மூ­லம் தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 907,214ஆக அதி­க­ரித்­துள்­ளது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 5,191 பேர் தலை­ந­கர் சோலைச் சேர்ந்­த­வர்­கள்.

கிரா­மப் புறங்­க­ளுக்­கும் நோய் பர­வி­யுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 134 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து அங்கு சென்­ற­வர்­கள்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக 274 பேர் மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­னர். மேலும் 25 பேர் கொவிட்-19 கார­ண­மாக மாண்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதன்­மூ­லம் கொவிட்-19 கார­ண­மாக தென்­கொ­ரி­யா­வில் இது­வரை 6,812 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

மொத்த மக்­கள்­தொ­கை­யில் 87 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போட்­டு­விட்­ட­தாக தென்

கொ­ரிய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

தென்­கொ­ரிய மக்­கள்­தொ­கை­யில் 85.7 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

மக்­கள்­தொ­கை­யில் 53.1 விழுக்­காட்­டி­னர் பூஸ்­டர் எனப்­படும் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!