இறங்குமுகத்தில் ஃபேஸ்புக், ஏறுமுகத்தில் அமேசான் 

ஃபேஸ்புக் சமூக ஊடகத் தளத்தை நடத்தும் மெட்டா நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் US$251 பில்லியன் (S$337.8 பில்லியன்) சரிந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் ஒட்டுமொத்த பொருளியலுக்குச் சமமான தொகை இது.

மெட்டாவின் கடந்த ஆண்டு நான்காம் காலாண்டு வளர்ச்சி குறைந்ததை அடுத்து, அதன் பங்குவிலைகள் 20 விழுக்காடு குறைந்தன. அதனால் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு சரிந்தது.

வரலாற்றிலேயே அமெரிக்க நிறுவனம் ஒன்றின் சந்தை மதிப்பில் ஏற்பட்டுள்ள மிகப் பெரியச் சரிவு இதுவாகும்.

இந்த இழப்புக்குப் பின்னர் மெட்டா நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ஏறத்தாழ 900 பில்லியன் டாலராக உள்ளது.

வியாழக்கிழமை (பிப்ரவரி 3) அன்று மெட்டாவின் பங்குவிலைகள் கடும் சரிவைச் சந்தித்த அதே வேளையில், அமேசான், டுவிட்டர், ஸ்னேப், பின்டரஸ்ட் போன்ற தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் பங்குவிலைகளும் சரிந்தன. ­­­

குறிப்பாக, அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு US$119 பில்லியன் குறைந்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) அன்று, விட்டதைப் பிடிக்கக் காத்திருக்கிறது அமேசான் நிறுவனம்.

வெள்ளிக்கிழமை அன்று , அமேசானின் சந்தைமதிப்பு கிட்டத்தட்ட US$200 பில்லியன் உயரும் என்று கூறப்படுகிறது.

அமேசானின் 2021 நான்காம் காலாண்டு வருவாய் எதிர்ப்பார்ப்புகளை மிஞ்சி உயர்ந்ததே அதற்குக் காரணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!