மலேசியாவில் மீண்டும் தொற்று அதிகரிப்பு

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நான்கு மாதங்­கள் இல்­லாத அள­வுக்கு மீண்­டும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் கூடி­யுள்­ளன.

நேற்று ஒருநாள் மட்­டும் 9,117 புதிய கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இது, கடந்த அக்­டோ­பர் 8ஆம் தேதி அல்­லது நான்கு மாதங்­களுக்­குப் பிறகு பதி­வான ஆக அதிக தொற்­றுச் சம்­ப­வங்­க­ளா­கும்.

புதிய தொற்­று­க­ளு­டன் சேர்த்து பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 2,904,131க்கு அதி­கரித்­துள்­ளது என்று சுகா­தார துறை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா நேற்று தமது டுவிட்­டர் பதி­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அன்று கிருமி தொற்றும் விகி­த­மும் 1.13க்கு அதி­க­ரித்­தது. இது, இதற்கு முந்திய நாளில் 1.11ஆக இருந்­தது.

சீனப் புத்­தாண்டுக் கொண்­டாட்­டத்­தைத் தொடர்ந்து தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

அனைத்து இனத்­தைச் சேர்ந்த மலே­சி­யர்­களால் கடைத்­தொ­கு­தி கள் நிரம்பி வழிந்தன. ஏராளமான வர்கள் நீண்ட வார இறுதியைப் பயன்படுத்தி சுற்றுலாவுக்கும் சொந்த ஊர்­க­ளுக்­கும் சென்றனர்.

இத­னால் தொற்­றுச் சம்­ப­வங்­கள் நான்கு மாதங்கள் காணாத அளவுக்கு அதி­க­ரித்தது.

மலே­சி­யா­வில் 78.8 விழுக்­காடு மக்­க­ள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்டுள்ளனர் என்­றும் 37.5 விழுக்­காட்­டி­னர் கூடு­தல் தடுப்­பூசி போட்டு உள்ளனர் என்றும் மலே­சிய அர­சாங்க புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த நிலை­யில் கடந்த வியாழக்­ கி­ழமை ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான குழந்­தை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் பணியை மலேசிய அதிகாரிகள் தொடங்கியுள்ள னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!