சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா விரைவில் அனுமதி

மெல்­பர்ன்: வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்கு ஆஸ்­தி­ரே­லியா விரை­வில் தனது எல்­லை­யைத் திறக்­க­வுள்­ளதாக அந்­நாட்­டின் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் சொன்­னார்.

இந்த வாரம் கூட­வுள்ள ஆஸ்தி­ரே­லிய நாடா­ளு­மன்­றத்­தில் இது­குறித்து விவா­திக்­கப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­கான கட்­டுப்­பா­டு­க­ளைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்­தி­ரே­லியா தனது எல்­லை­களை மூடி­யது.

அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி, குறை­வான கிரு­மித்தொற்று சம்­ப­வங்­கள் போன்­ற­வற்­றால், கடந்த சில மாதங்­க­ளாக படிப்­ப­டி­யாக எல்லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி வரு­கிறது ஆஸ்­தி­ரே­லியா.

தற்­போது குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள், மாண­வர்­கள் என குறிப்­பிட்ட சில பிரி­வி­னர் மட்­டுமே ஆஸ்­தி­ரே­லி­யா­விற்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஓமிக்­ரான் தொற்று தொடர்ந்து பரவி வரு­கிறது என்­றா­லும், மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப் படு­வோர் எண்­ணிக்­கை­யும் உயி­ரி­ழப்­பும் குறை­யத் தொடங்­கி­யுள்­ளது.

இதற்­கி­டையே, இரண்டு அல்­லது மூன்று வாரங்­க­ளுக்­குள் ஆஸ்­தி­ரே­லியா தனது எல்­லை­களை முழு­மை­யா­கத் திறக்­கக்­கூ­டும் என்று பெய­ர் குறிப்பிடப்படாத தகவல் வட்டாரங்களை மேற்­கோள்­காட்டி நியூஸ் கார்ப் நாளி­தழ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இவ்­வாண்­டு ஆஸ்­தி­ரே­லிய நாடா­ளு­மன்­றத்­தின் முதல் கூட்­டம் இன்று முதல் கூட­வுள்­ளது.

இந்­நி­லை­யில் பேசிய பிர­த­மர் மோரி­சன், வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­க­ளைப் பாது­காப்­பா­க­வும் விரை­வா­க­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு வர­வேற்­ப­தற்­கான முடிவை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தாக சொன்­னார்.

ஈஸ்­டர் பண்­டி­கைக்கு முன்­ன­தாக, ஆஸ்­தி­ரே­லியா தனது அனைத்­து­லக எல்­லையை முழு­மை­யா­கத் திறக்­கும் என்று சென்ற ஜன­வரி மாதம் மோரி­சன் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

அந்­நாட்­டின் உள்­துறை அமைச்­சர் கேரன் ஆண்ட்­ரூஸ், "வெளி­நாட்­டுப் பய­ணி­களை அனு­ம­திப்­பது குறித்து அர­சாங்­கம் விரை­வில் முடி­வெ­டுக்­கும்," என்று சொன்­

னார்.

ஆஸ்­தி­ரே­லிய மக்­கள்­தொ­கை­யில் கிட்­டத்­தட்ட 95 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!