சீனா, மலேசியாவுடன் இருதரப்பு பயண ஏற்பாட்டிற்கு தாய்லாந்து திட்டம்

பேங்­காக்: சுற்­று­லாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் பொருட்டு, சீனா, மலே­சியா ஆகிய நாடு­க­ளு­டன் இரு­த­ரப்பு பயண ஏற்­பாடு குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த தாய்­லாந்து திட்­ட­மிட்­டுள்­ளது.

இது­கு­றித்து சீனா­வின் கலா­சார, சுற்­றுலா அமைச்­ச­ரு­டன் தாய்­லாந்து பிர­த­மர் பிர­யுத் சான்-ஓசா விரை­வில் பேச­வுள்­ள­தாக அர­சாங்கப் பேச்­சா­ளர் ஒரு­வர் சொன்­னார்.

இது­போன்ற பயண ஏற்­பாடு குறித்து மலே­சி­யா­வு­ட­னும் இம்­மாத பிற்­ப­கு­தி­யில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தாய்­லாந்து அதி­கா­ரி­கள் தயா­ராகி வரு­வ­தாகவும் அவர் சொன்­னார்.

தாய்­லாந்து அறி­மு­கப்­ப­டுத்­திய தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளுக்­கான தனி­மைப்­ப­டுத்­தல் இல்­லாத பய­ணத் திட்­டம் சுற்­று­லாப் பய­ணி­களை அதி­க­ள­வில் ஈர்க்­க­வில்லை.

சுற்­று­லாப் பய­ணி­கள் தங்­கள் நாட்­டிற்­குத் திரும்­பும்­போது, அங்கு அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­யி­ருப்­ப­தால், இத்­திட்­டத்­தின்­கீழ், சுற்­று­லாப் பய­ணி­களை ஈர்க்க முடி­ய­வில்லை என்­றார் பேங்­காக் பொரு­ளா­தார நிபு­ணர் ஒரு­வர்.

எனவே, பொரு­ளா­தார மீட்­சிக்கு உத­வும் வகை­யில், இரு­த­ரப்பு பயண ஏற்­பாட்­டைக் கொண்டு வர தாய்­லாந்து ஆர்­வம் காட்டி வரு­கிறது.

2019ஆம் ஆண்­டில் தாய்­லாந்­துக்­குச் சென்ற சுற்­று­லாப் பய­ணி­களில் மூன்­றில் ஒரு பங்­கி­னர் சீனா, மலே­சியா ஆகிய நாடு­களில் இருந்து சென்­ற­வர்­கள் ஆவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!