கடும் பொருளியல் நெருக்கடி; திக்குமுக்காடும் இலங்கை

கொழும்பு: இலங்­கை­யில் மிகக் கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. முன் இல்­லாத அள­வில் அந்­நாட்­டின் பொரு­ளி­யல் படு­வீழ்ச்சி கண்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தின் உத­வியை அது நாடு­கிறது.

நிதி­யத்­து­ட­னும் நிதி உதவி செய்­யக்­கூ­டிய மற்ற அமைப்­பு­க­ளு­ட­னும் பேச்­சு­வார்த்தை நடத்த இலங்கை தயா­ராக இருப்­ப­தாக அந்­நாட்டின் தோட்டத்தொழில் அமைச்­சர் ரமேஷ் பத்­தி­ரன நேற்று கூறி­னார்.

"கடந்த காலத்­தில் அனைத்­

து­ல­கப் பண நிதி­யத்­தின் உத­வியை இலங்கை பல­முறை நாடி­யுள்­ளது. இம்­மு­றை­யும் அத­னி­ட­மி­ருந்து நிதி உதவி பெறு­வது குறித்து

பரி­சீ­லனை செய்து வரு­கி­றோம்.

இலங்­கை­யின் வெளி­நாட்டு நாண­யச் செலா­வணி 3.2 பில்­லி­ய­னுக்­குச் சரிந்­துள்­ளது. இத­னால் எரி­பொ­ருள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பெருள்­க­ளுக்­கான இறக்­கு­மதி வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பண­வீக்­க­மும் மோச­ம­டைந்து வரு­கிறது.

வாங்­கிய கடன்­களில் ஏறத்­தாழ 4 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை இவ்­வாண்டு திருப்­பிக் கொடுக்க வேண்­டிய நிலை 22 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யின் பொரு­ளி­யல், நிதி நிலை குறித்து அனைத்­

து­ல­கப் பண நிதி­யம் மதிப்­பீடு செய்ய இருக்­கிறது.

அதன் விவ­ரங்­களை இலங்கை அர­சாங்­கம் நாடா­ளு­மன்­றம் கூடும்­போது வெளி­யிட வேண்­டும் என்று எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ னர்­கள் சிலர் குரல் எழுப்­பி­யுள்­ள­னர்.

"அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தின் மதிப்­பீடு குறித்த விவ­ரங்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் வெளி­யி­டப்­பட வேண்­டும். அதன்­படி என்­னென்ன நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்­பது குறித்து அர­சாங்­கம் தெளி­வு ப­டுத்த வேண்­டும்," என்று எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹர்ஷா டி சில்வா தெரி­வித்­தார். சில நாட்­க­ளுக்­குத் தேவை­யான எரி­பொ­ருள் மட்­டுமே இருப்­பில் உள்­ள­தாக திரு பத்­தி­ரன கூறி­னார்.

எரி­வாயு வாங்க தேவை­யான தொகையை அர­சாங்­கத்துக்கு விடு­விக்­கும்­படி இலங்கை மத்­திய வங்­கிக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

எரி­வாயு தட்­டுப்­பாடு கார­ண­மாக இலங்­கை­யில் மின்­சா­ரத் தடை­யும் ஏற்­பட்­டுள்­ளது.

அடுத்த சில நாள்­களில் தினந்­தோ­றும் ஐந்­தி­லி­ருந்து ஆறு மணி நேரத்­துக்கு மின்­சாரம் இல்­லா­மல் இலங்கை மக்­கள் தவிக்­கக்­கூ­டும் என்று அந்­நாட்­டின் மின்­சார ஆணை­யம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இந்­நி­லை­யில், எரி­வாயு விலை உயர்ந்­தால் ஏற்­கெ­னவே திக்­கு­முக்­கா­டிக் கொண்­டி­ருக்­கும் இலங்­கை­யின் நிலை மோச­ம­டை­யும்.

"உக்­ரே­னுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடையே போர் வெடிக்­கக்­கூ­டாது என்று நாங்­கள் வேண்­டிக்­கொள்­கி­றோம். போர் மூண்­டால் எரி­வாயு விலை அதி­க­ரிக்­கும். அவ்­வாறு நேர்ந்­தால் இலங்­கையை அது பெரி­த­ள­வில் பாதிக்­கும்," என்­றார் திரு பத்­தி­ரன.

மோச­ம­டை­யும் பண­வீக்­கம்

இலங்­கை­யில் தொடர்ந்து நான்­கா­வது மாத­மா­கப் பண­வீக்­கம் முன் இல்­லாத அள­வில் அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் இலங்­கை­யின் தேசிய பய­னீட்­டா­ளர் விலைக் குறி­யீடு 16.8 விழுக்­காடு ஏற்­றம் கண்­டது.

இந்­திய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து இலங்கை 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் கடன் வாங்­கக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் தொகை­யைக் கொண்டு நாட்­டுக்­குத் தேவை­யான எரி­வா­யு வை வாங்க இலங்கை அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான சிலோன் எரி­வாயு நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக இலங்கை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இலங்­கை­யின் பொரு­ளி­யல் நிலை­கு­லைந்­தி­ருப்­ப­தால் மளி­கைப் பொருள்­ தட்­டுப்­பா­டும் ஏற்­பட்­டுள்­ளது. ஒவ்­வொ­ரு­வ­ரும் இவ்­

வ­ளவுதான் வாங்க முடி­யும் என்று பேரங்­கா­டி­களில் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல ஒவ்­வொரு வாக­னத்­துக்­கும் குறிப்­பிட்ட அளவு எரி­வாயு மட்­டுமே விற்க முடி­யும் என்று பல பெட்­ரோல் நிலை­யங்­கள் தெரி­வித்­துள்­ளன.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை ஏற்­பட்­ட­தி­லி­ருந்து இலங்­கை­யின் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை முடங்­கி­யுள்­ளது. வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று பணி­பு­ரி­யும் இலங்கை நாட்­ட­வர்­கள் சொந்த நாட்­டுக்­குப் பணம்

அனுப்­பு­வ­தும் குறைந்­து­விட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!