கலகத் தடுப்பு அதிகாரிகளுடன் மோதிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

வெலிங்­டன்: கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்­துக்கு எதி­ராக நியூ­சி­லாந்­தில் ஆர்ப்­பாட்­டம் நடந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், ஆர்ப்­பாட்­டக்­

கா­ரர்­க­ளுக்­கும் கல­கத் தடுப்பு காவல்துறை அதி­கா­ரி­க­ளுக்­கும் இடையே நேற்று கைக­லப்பு மூண்­டது.

இதில் காவல்­துறை அதி­கா­ரி­கள் மூவர் காய­ம­டைந்­த­னர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் இந்த வன்­மு­றைச் செயல் மிக­வும் அவ­மா­னத்­துக்­கு­ரி­யது என்று நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஜெசிண்டா

ஆர்­டர்ன் சாடி­னார்.

காவல்­துறை அதி­கா­ரி­களை நோக்­கி அமி­லம் வீசப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர் ஒரு­வர் காவல்­துறை அதி­கா­ரி­களை நோக்கி காரை வேக­மா­கச் செலுத்­தி­ய­தா­க­வும் அதி­கா­ரி­

க­ளுக்கு மிக அரு­கில் சென்­ற­தும் காரை அவர் திடீ­ரென நிறுத்­தி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த இரண்டு வாரங்­க­ளாக தலை­ந­கர் வெலிங்­ட­னில் நடை­பெற்று வரும் ஆர்ப்­பாட்­டங்­கள் கார­ண­மாக வழக்­க­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­துக்கு அரு­கில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் பலர் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் வைத்த சாலைத் தடுப்­பு­களைக் காவல்­துறை அதி­கா­ரி­கள் நேற்று அகற்ற முயன்­ற­னர். இத­னால் இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் இடையே கடு­மை­யான வாக்­கு­வா­த­மும் கைக­லப்­பும் ஏற்­பட்­டது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளு­டன் இருக்­கும் குறிப்­பிட்ட சிலர் வன்­மு­றைச் செயல்­களில் ஈடு­ப­டு­வ­தாக நியூ­சி­லாந்து காவல்­து­றை­யின் உதவி ஆணை­யர் ரிச்­சர்ட் சேம்­பர்ஸ் கூறி­னார்.

வன்­மு­றை­யைக் கட்­ட­விழ்க்க வேண்­டும் என்ற இலக்­கு­டன் குறிப்­பிட்ட சிலர் மூர்க்­கத்­த­ன­மாக நடந்து­கொள்­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!