போர் எதிரொலி: எண்ணெய் விலை உயர்வு

கீவ்: உக்­ரேன் மீதான ரஷ்­யத் தாக்­கு­த­லின் எதி­ரொ­லி­யா­கக் கச்சா எண்­ணெய் விலை அதி­க­ரித்­துள்­ளது.

ஒரு பீப்­பாய் கச்சா எண்­ணெய்­யின் விலை நூறு டால­ருக்­கும் மேல் உயர்ந்­தது; 2014ஆம் ஆண்­டுக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக எண்­ணெய் விலை அவ்­வாறு கூடி­யது.

எரி­பொ­ருள் விநி­யோ­கம் அத­னால் மேலும் தடை­களை எதிர்­நோக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

ஐரோப்­பா­வில் இயற்கை எரி­வாயு விலை 40 விழுக்­காடு கூடி­யது; தங்­கம், அலு­மினியம், செம்பு, நிக்­கல் போன்­ற­வற்­றின் விலை­யும் உயர்ந்­துள்­ளது.

ஐரோப்­பிய நாடு­கள் அவற்­றுக்­கான எண்­ணெய், எரி­வா­யுத் தேவை­யில் 25 விழுக்­காட்டை ரஷ்­யா­வி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­கின்­றன.

அமெ­ரிக்­கா­வும், ஐரோப்­பா­வும் கூடிய விரை­வில் மாஸ்­கோ­வின் மீது அதி­கத் தடை­களை விதிக்­கக்­கூ­டும்.

எரி­பொ­ரு­ளுக்­குத் தடை­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டா­லும், ரஷ்ய எண்­ணெய்ப் பீப்­பாய்­களை வர்த்­த­கர்­கள் அதி­கக் கவ­னத்­து­டனே கையாள்­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கருங்­க­டல் வட்­டா­ரத்­தில் உள்ள உக்­ரே­னிய நக­ரங்­களில் ரஷ்­யத் துருப்­பு­கள் நுழைந்­த­துமே உல­கெங்­கும் பங்­கு­க­ளின் விலை வீழ்ச்­சி­ கண்­டது. மாஸ்கோ முழு­வீச்­சி­லான படை­யெ­டுப்பை நிகழ்த்­தி­யிருப்­பதாக உக்­ரேன் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், தங்­கத்­தின் விலை 3.4% உயர்ந்து, ஓர் அவுன்­ஸிற்கு 1,973 டால­ருக்­கும் மேல் பதி­வா­னது. 2020 செப்­டம்­ப­ருக்குப் பிறகு ஆக அதிக விலை அது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!