விளையாட்டுச் செய்திகள்

ஆறு கோல்கள் போட்டு லிவர்பூல் அசத்தல்; மேன்சிட்டியை நெருங்குகிறது

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தில், லீட்ஸ் குழுவை 6-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது. இதன்மூலம் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கும் இரண்டாம் நிலையில் உள்ள லிவர்பூலுக்கும் இடையிலான இடைவெளி மூன்று புள்ளிகளாக குறைந்துள்ளது. லீட்ஸ் குழுவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் லிவர்பூலின் முகமது சாலா, சாடியோ மானே தலா இரு கோல்களைப் போட்டு வெற்றி வாய்ப்பை உறுதிசெய்தனர்.

யுனைடெட், அட்லெட்டிகோ சமநிலை

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைடெட், அட்லெட்டிகோ மட்ரிட் குழுக்கள் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அட்லெட்டிகோவின் கைதான் ஓங்கியிருந்தது. ஆனால், பல்வேறு தருணங்களில் கோல் போடும் வாய்ப்புகளை அக்குழு நழுவவிட்டது. அதுபோக, ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் அக்குழு தற்காப்பில் செய்த தவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டது யுனைடெட். ஆட்டம் முடிவதற்கு 10 நிமிடங்களே இருந்த நிலையில், மாற்று ஆட்டக்காரர் ஆன்டனி எலெங்கா கோல் போட்டு யுனைடெட்டிற்கு சமநிலையைப் பெற்றுத் தந்தார்.

குழுவிற்காக கோல் போட்டார்;

எதிராக கோல் விழவும் காரணமானார்

லிஸ்பன்: நடப்பு சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் தமது அபார ஆட்டத்திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் அயெக்ஸ் குழுவின் செபாஸ்டியன் ஹலர். இப்போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தில் அயெக்ஸ், பென்ஃபிகா குழுக்கள் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.

இந்த ஆட்டத்தில் தமது குழுவுக்கு எதிராக சொந்த கோல் விழ காரணமாக இருந்த ஹலர், அதற்கு ஈடுசெய்யும் விதமாக ஒரு கோலைப் போட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!