கோன்டேவின் எதிர்காலம் கேள்விக்குறி

லண்­டன்: பிரி­மி­யர் லீக் காற்­பந்­துக் குழுக்­க­ளுக்கு அதிர்ச்சி தோல்­வி­யைக் கொடுத்து எ­ஃப்ஏ கிண்­ணப் போட்­டி­யின் அடுத்­தச் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது மிடல்ஸ்­புரோ.

எ­ஃப்ஏ கிண்­ணத்­தின் நான்­கா­வது சுற்­றில் மான்­செஸ்­டர் யுனை­டெட் குழுவை வெளி­யேற்­றிய மிடல்ஸ்­புரோ குழு, நேற்­றைய ஆட்­டத்­தில் மற்­றொரு பிரி­மி­யர் லீக் குழு­வான டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­ப­ரை­யும் அத்­தொ­ட­ரில் இருந்து வெளியே அனுப்­பி­யது.

இந்தத் தோல்வி, இப்­ப­ரு­வத்­திலும் ஸ்பர்ஸ் குழு­விற்கு எந்த வெற்­றிக் கிண்­ண­மும் கிடைக்­காது என்­பதை உறு­தி­ப­டுத்­து­கிறது.

அது மட்­டு­மல்­லா­மல், ஸ்பர்ஸ் நிர்­வாகி அண்­டோ­னியோ கோன்டே அக்­கு­ழு­வில் நீடிப்­பது குறித்த கேள்­வி­யை­யும் எழுப்­பி­யுள்­ளது.

நவம்­பர் மாதம் அக்­கு­ழு­வின் நிர்­வா­கி­யாக பொறுப்­பேற்ற கோன்டே, நான்கு தொடர் தோல்வி­க­ளைச் சந்­திக்க நேர்ந்­தால் பதவி வில­கக்­கூ­டும் என்று அவர் ‌சூச­க­மாக முன்பே கூறி­யி­ருந்­தார்.

2008ஆம் ஆண்­டில் லீக் கிண்­ணத்தை வென்­ற­தற்­குப் பிறகு ஸ்பர்ஸ் குழு எந்­தக் கிண்­ணத்­தை­யும் வென்­ற­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நேற்­றைய ஆட்­டத்­தில் ஸ்பர்ஸ் குழு­விற்கு ஈடு­கொ­டுத்து விளை­யா­டி­யது 'சாம்­பி­யன்ஸ்­‌ஷிப்' குழு­வான மிடல்ஸ்­புரோ.

இரு குழுக்­களும் கோல் எது­வும் போடாத­தால் வழக்­க­மான ஆட்ட நேரம் கோல் எது­வும் இல்­லா­மல் சம­நிலை கண்­டது.

கூடு­தல் நேரம்­தான் ஸ்பர்­சின் தலை­யெ­ழுத்தை மாற்­றி­யது. மாற்று ஆட்­டக்­கா­ர­ராக வந்த மிடல்ஸ்­புரோ­வின் இளம் வீரர் ஜோஸ் கால்­பர்ன் 107வது நிமி­டத்­தில் கோல்

போட்டு, ஸ்பர்­சின் கிண்­ணம் வெல்­லும் கன­வைத் தவி­டு­பொ­டி­யாக்­கி­னார்.

1-0 என்ற கோல்­க­ணக்­கில் பெற்ற இந்த வெற்றி மிடல்ஸ்­புரோ ரசி­கர்­க­ளுக்கு மறக்க முடி­யாத ஒன்­றாக இருக்­கும்.

மற்ற ஆட்­டங்­களில் பீட்­டர்­புரோவை 0-2 என வீழ்த்­திய மான்­செஸ்­டர் சிட்­டி­யும் ஸ்டோக்கை 1-2 என வீழ்த்­திய கிறிஸ்­டல் பேல­சும் காலி­று­திக்கு முன்­னேறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!