ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத பிரளயம்; தப்பித்தது சிட்னி

வின்­சர்: வர­லாறு காணாத அள­வுக்கு கடந்த ஒரு வார­மாக ஆஸ்­தி­ரே­லி­யா­வைப் பாடாய் படுத்­திய கிழக்­குக் கரை­யோர வெள்­ளச் சம்பவங்கள், குறைந்­தது 13 உயிர்­களைப் பறித்து­விட்­டன.

இந்­தக் கட்­டுக்­க­டங்­காத புயல்­மழை­யில் சிக்­கா­மல் இருக்­கு­மாறு ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அவ­ச­ர­கா­லச் சேவை­கள் நேற்று அறி­வு­றுத்­தி­ய­து­டன் கிட்­டத்­தட்ட 200,000 பேரை வெளி­யே­றி­வி­டும்­படி உத்­த­ர­வும் இட்­டது.

இருப்­பி­னும், இந்­தப் பிர­ள­யத்­தின் கடு­மை­யி­லி­ருந்து சிட்னி நகர் தப்­பித்­து­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கரை­யோ­ர­மாக கிட்­டத்­தட்ட 400 கிலோ­மீட்­டர் தூரம்­வரை கடும் மழை மற்­றும் புயல் காற்று எச்­சரிக்­கை­களை அதி­கா­ரி­கள் விடுத்­திருந்­த­னர். சிட்­னி­யைச் சூழ்ந்த புற­ந­கர்­கள் உட்­பட எங்­கும் நீர் மட்­டம் அதி­வே­க­மாக உயர்­வதை மக்­கள் உணர்ந்­த­னர்.

அடுத்து என்ன என்று கணிக்க முடி­யாத புயல்­மழை, கிழக்­குக் கரை­யோ­ரப் பகு­தி­யில் தெற்கே நோக்கி குவின்ஸ்­லாந்­தில் தொடங்கி நியூ சவுத் வேல்ஸ் வரை மெல்­லச் சென்­றது.

புயல்­மழை சென்ற வழி­யெல்­லாம் ஆறு­களும் நீர்த்­தேக்­கங்­களும் அவற்­றின் கரை­களை உடைத்­தன. வீடு­க­ளின் கூரை வரை நீர் பெருக்­கெ­டுத்து நிரப்­பி­விட்­டது.

சிட்­னிக்கு வடக்கே பல­நூறு கிலோ­மீட்­டர் தொலை­வில் குறைந்த காற்றழுத்தம் ஏற்­ப­டுத்­திய தாக்­கம், கடும் மழை­யைப் பொழிய வைத்து­விட்­டது.

இருப்­பி­னும், பெரும் சேதத்­துக்கு சிட்னி நகர் ஆளா­கும் என்ற முன்­னு­ரைப்பு, பயந்த அள­வுக்கு இல்லை என்று வெதர்­ஸோ­னின் வானிலை ஆய்­வா­ளர் பென் டோமென்­சினோ தெரி­வித்­தார்.

"கடும் மழைப் பொழி­வி­லி­ருந்து இன்று சிட்னி தப்­பித்­தது," என்று ஏஎ­ஃப்பி நிறு­வ­னத்­தி­டம் அவர் கூறி­னார்.

இந்­தப் புயல்­மழை இன்று வலு­வி­ழந்­து­வி­டும் என்று தாம் நம்­பு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

சிட்­னி­யின் 80% தண்­ணீர் விநி­யோ­கம், தென்­மேற்கு சிட்னி பகுதி­யில் உள்ள வொர­கம்பா அணை­யி­லி­ருந்து வரு­கிறது. புதன்­கி­ழமை அதி­காலை முதல் வெள்­ள­நீர் அணை­யைக் கடந்­து­விட்­டது.

இந்­நி­லை­யில், இன்­ன­மும் 70க்கு மேற்­பட்ட வெளி­யேற்ற உத்தரவுகள் நடப்­பில் உள்­ள­தாக நியூ சவுத் வேல்­சின் அவ­ச­ர­கா­லச் சேவை­கள் தெரி­வித்­தன.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வெள்­ளம், புதர்த் தீ, சுழல்­காற்று, வறட்சி சம்­ப­வங்­கள் மேலும் கடு­மை­யா­வது அடிக்­கடி நிகழ்­வ­தா­க­வும் விஞ்­ஞா­னி­கள் கூறு­கின்­ற­னர்.

கடு­மை­யான பரு­வ­நிலை மாற்­றத்­தின் முன்­க­ளத்­தில் ஆஸ்­தி­ரே­லியா உள்­ளது என்று சுற்­றுச்­சூ­ழல் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!