ரிவனேஷ் குமார் மரணம்: பெற்றோருடன் கைரி சந்திப்பு

கோலாலம்பூர்: சிறுவன் ரிவனேஷ் குமார் உயிரிழந்ததற்கான காரணத்தை இன்று சிறுவனின் பெற்றோரிடம் தாம் விளக்கவுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று தெரிவித்தார். தந்தை நரேஷ் குமார் மற்றும் தாயார் விஜயராணியைத் தமது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ரகசியத்தன்மை கருதி 13 வயதுடைய ரிவனேஷ் ஏன் மரணமடைந்தார் என்பதைப் பற்றி முதலில் அவரின் பெற்றோரிடம் தெரிவிப்பதே முறை என்று அவர் விளக்கினார். பெற்றோர் அனுமதித்தால் விவரங்களைப் பின்னர் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

கொவிட்-19 தடுப்பூசியால் மரணம் நேர்ந்ததா என்பதைப் பிரேத பரிசோதனை அறிக்கையை தங்களின் மருந்தகக் கண்காணிப்புக் குழு மதிப்பிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தடுப்பூசி காரணத்தால் தங்களின் மகன் இறந்துவிட்டதாக ரிவனேஷின் பெற்றோர் நம்புகின்றனர். தங்களின் மகனுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதால் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

தனது முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டு 18 நாள்களுக்குப் பின்னர் ரிவனேஷ் கடந்த மாதம் 3ஆம் தேதியன்று மாண்டார். கராத்தே வகுப்புக்குச் செல்லும் வழியில் மின்தூக்கியில் திடீரென்று மயங்கி விழுந்து இறந்துவிட்டார். காஜாங் மருத்துவமனையில் அவரின் இறப்பு உறுதிசெய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!