ஆர்ப்பாட்டம் நடத்த ரஷ்யர்களுக்கு அழைப்பு

லியேவ்: ஐரோப்­பா­வின் ஆகப் பெரிய அணு­வா­யுத ஆலையை ரஷ்­யப் படை­கள் கைப்­பற்­றி­யுள்­ள­னர். இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­மாறு ரஷ்­யர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ளார் உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி.

ரஷ்­யப் படை­யி­ன­ருக்­கும் உக்­ரே­னி­யப் படை­யி­ன­ருக்­கும் இடை­யி­லான கடு­மை­யான சண்டை

கார­ணமாக ஸ்போ­ரி­சியா அணு­வா­யுத ஆலை தீப்­பற்றி எரிந்­த­தாக உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர். தீ அணைக்­கப்­பட்­ட­தால் பேர­ழிவு தவிர்க்­கப்­பட்­டது.

கதிர்­வீச்சு அபா­யம் இல்­லாத வாழ்க்கை வேண்­டும் என்று குரல் கொடுத்து ரஷ்­யா­வின் தலை­மைக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­களை அந்­நாட்டு மக்­கள் நடத்த வேண்­டும் என்று திரு ஸெலென்ஸ்கி

கேட்­டுக்­கொண்­டார்.

கதிர்­வீச்­சுக்கு எல்­லை­க­ளைப் பற்றி தெரி­யாது என்றும் அது ரஷ்­யா­வை­யும் சேர்த்து அனைத்து நாடு­க­ளை­யும் வெகு­வா­கப் பாதிக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

1986ஆம் ஆண்­டில் உக்­ரே­னில் உள்ள செர்­னோ­பில் அணு­வா­யுத ஆலை­யில் கசிவு ஏற்­பட்­ட­தில் பலர் உயி­ரி­ழந்­த­னர்.

அப்­போது ரஷ்­யா­வு­டன் உக்­ரே­னும் சோவி­யத் யூனி­ய­னின் ஒரு பகு­தி­யாக இருந்­தது. செர்­னோ­பில் சம்­ப­வம் போல இன்­னொரு சம்­ப­வம் நிக­ழக்­கூ­டாது என்­றார் திரு ஸெலென்ஸ்கி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!