பிபிசி, ஜெர்மன் ஊடகத்துக்கு தடை விதித்த ரஷ்யா

மாஸ்கோ: பிரிட்­ட­னின் பிபிசி, ஜெர்­ம­னி­யின் ஊட­கம் ஆகி­ய­வற்­றுக்கு ரஷ்யா தடை விதித்­துள்­ளது. உக்­ரேன் போர் தொடர்­பாக இந்­தச் செய்தி நிறு­வ­னங்­கள் பொய்ச் செய்­தி­களை வெளி

யிடு­வ­தாக ரஷ்யா குற்­றம்

சுமத்­தி­யுள்­ளது.

மேற்­கத்­திய நாடு­க­ளுக்­குச் சொந்­த­மான ஊட­கங்­கள் நடு­

நி­லை­யு­டன் நடந்­து­கொள்­வ­தில்லை என்­றும் உலக

மக்­க­ளுக்கு ரஷ்­யா­வைப் பற்றி தவ­றான கருத்­து­க­ளைத் தெரி­விப்­ப­தா­க­வும் ரஷ்யா பல­முறை குறை­கூ­றி­யுள்­ளது.

மேற்­கத்­திய நாடு­க­ளின் தலைவர்­கள் செய்­யும் தவ­று­களை அந்­தச் செய்தி நிறு­வ­னங்­கள் வெளி­யி­டா­மல் மறைப்­ப­தாக அது தெரி­வித்­தது.

ஈராக் மீதான படை­யெ­டுப்பு, ஊழல் போன்ற விவ­கா­ரங்­கள் குறித்து மேற்­கத்­திய நாடு­க­ளின் ஊட­கங்­கள் கேள்வி எழுப்­பு­வ­தில்லை என்று ரஷ்யா கூறி­யது.

இதற்­கி­டையே, ரஷ்யா தனக்கு இடை­யூறு விளை­வித்­தா­லும் ரஷ்ய மக்­க­ளைச் சென்­ற­டைய தன்­னால் முடிந்த அனைத்­தை­யும் செய்­யப்­போ­வ­தாக பிபிசி சூளு­ரைத்

துள்­ளது. நேற்­றைய நில­வ­ரப்­படி ரஷ்­யா­வில் உள்ள சில­ரால் பிபிசி செய்­தி­க­ளைக் கேட்­கவோ

பார்க்­கவோ முடி­யா­மல் போன­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ரஷ்ய ஊட­கம் அந்­நாட்டு அர­சாங்­கத்­தின் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!