ஆஸ்திரேலிய நகரங்களை அச்சுறுத்தும் கனமழை, வெள்ள அபாயம்

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கிழக்­குப் பகு­தி­யில் ஏற்­கெ­னவே வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள இடங்­களில் அடுத்த சில நாட்­க­ளுக்கு கன­மழை பெய்­யும் என்று அந்­நாட்டு அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இத­னால் வெள்­ளம் மோச­ம­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த சில நாட்­க­ளாக பெய்­து­ வ­ரும் கன­மழை கார­ண­மாக வெள்­ளம் ஏற்­பட்­ட­தில் அவ்­வி­டங்­க­ளுக்­குச் செல்ல பயன்­ப­டுத்­தப்­படும் சாலை­கள் நீரில் மூழ்­கி­விட்­டன.

இதன் கார­ண­மாக மீட்­புப் பணி­யாளர்­கள், நிவா­ரண உதவி அமைப்­பி­னர் ஆகி­யோ­ரால் அங்கு சென்­ற­டைய முடி­ய­வில்லை.

குவீன்ஸ்­லாந்­தின் தெற்­குப் பகுதி, நியூ சவுத் வேல்ஸ்

மாநி­லத்­தின் வடக்­குப் பகுதி ஆகி­யவை கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. வெள்­ளம் கார­ண­மாக அவ்­வி­டங்­களில் பெரும் சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தங்­கள் வீடு­க­ளை­யும் உடை­மை­க­ளை­யும் இழந்­துள்­ள­னர். பல கால்­ந­டை­கள் மாண்­டு­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். இது­வரை 13 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

"அபா­யக் கட்­டத்தை நாங்­கள் இன்­னும் கடக்­க­வில்லை. நதி­களில் நீரின் அளவு அதி­க­மாக உள்­ளது. நீரோட்­ட­மும் மிக­வும் வேக­மாக இருக்­கிறது," என்று நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் அவ­ச­ர­கா­லச் சேவை ஆணை­யர் கார்­லின் யார்க் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், வெள்­ளம் வடிந்த இடங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் தங்­கள் வீடு­க­ளுக்­கும் கடை­க­ளுக்­கும் திரும்பி துப்­பு­ர­வுப் பணி­களில் ஈடு­பட்­ட­னர்.

மேலும் பல­ரைக் காண­வில்லை என்­றும் அவர்­க­ளைத் தேடும் பணி­கள் தொட­ரும் என்­றும் நியூ சவுத் வேல்ஸ் மேயர் ஸ்டீவ் கிரேக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!