கியவ் நகரில் கூச்சல், குழப்பம்

கியவ்: கியவ் நக­ரி­லி­ருந்து மேற்கு உக்­ரே­னில் உள்ள பாது­காப்­பான இடத்­திற்­குச் செல்­லும் ரயில் வரு­வ­தாக வெள்­ளிக்­கி­ழமை வதந்தி பர­வி­ய­தால் பெண்­கள், குழந்­தை­கள் என ஏரா­ள­ம­னோர் உயி­ரைக் காப்­பாற்­றிக் கொள்ள ரயில் நிலை­யத்­தில் குவிந்­த­னர்.

"சீக்­கி­ரம், சீக்­கி­ரம்" என ஒரு தாய் தன் குழந்­தை­களை நோக்கி கத்­திக்­கொண்டே ஓடி­னார். ஒரு தம்­ப­தி­யர், சிறு­வனை அவ­னது கால் தரை­யில் படு­வ­தற்­குள் அவனை இழுத்­துக்­கொண்டு ஓடி­னர். ரயில்வே உடை அணிந்த ஒரு­வர், கூட்­டத்தை நோக்கி போ, போ, மற்­ற­வர்­களை பின்­தொ­டர்ந்து செல்­லுங்­கள் என்று உரக்­கக் கத்­திக் கொண்­டி­ருந்­தார்.

ஆனால் எந்­த­வொரு ரயி­லும் வர­வில்லை. சிறிது நேரத்­திற்­குப் பிறகு மக்­கள் வெறுப்பு அடைந்­த­னர். சிலர் பெட்டி படுக்­கை­களை இழுத்­துக்­கொண்டு குழந்­தை­க­ளை­யும் வாரிக்­கொண்டு தண்­ட­வா­ளங்­க­ளைக் கடந்து மற்­றொரு ரயில் தாழ்­வா­ரத்­துக்­குச் சென்­ற­னர்.

ரஷ்­யத் துருப்­பு­கள் அந்த நகரை சுற்றி வளைத்து இருந்­த­தால் சில பகு­தி­களில் மக்­கள் அச்­சத்­தில் பதுங்­கி­யி­ருந்­த­னர்.

போருக்கு முன்­னர் 2.8 மில்­லி­யன் மக்­கள் தொகை­யைக் கொண்ட கியவ் நகரை ரஷ்­யா­வின் கவச வாக­னங்­கள் மெது­வாக சுற்றி வளைத்து வரு­கின்­றன.

இது­வரை நடந்த சண்டை பெரும்­பா­லா­னவை நக­ருக்கு வெளி யே நடந்­தது. அங்கு ரஷ்ய கவச வாக­னங்­களும் ராணுவ வாக­னங்­களும் ஏறக்­கு­றைய ஒரு மைல் நீளத்­திற்கு வரி­சை­யாக நிறுத்தி வைக்­கப்­பட்டு இருப்­ப­தாக 'த நியூ­யார்க் டைம்ஸ்' தெரி­வித்­தது.

கார்­கிவ், மறி­ய­போல் நக­ரங் களைப் போல அத்­தி­யா­வ­சி­ய­மான பொருட்­க­ளான உணவு, மருந்து மற்­றும் தண்­ணீர், மின்­சார விநி­யோ­கத்தை குண்­டு­ம­ழை­யால் துண்­டித்து கியவ் நக­ரை­யும் ரஷ்­யப் படை­கள் கைப்­பற்ற முனைப்­புக் காட்டி வரு­கிறது.

நக­ரின் தென்­மேற்­கில் சாலை­கள், ரயில் பாதை­கள் திறந்­தி­ருக்­கின்­றன. ஆனால் வெளி­யே­று­ப­வர்­க­ளுக்­கான ரயில்­களில் குழந்­தை­க­ளால் இருக்­கை­கள் நிரம்­பி­விடு வதால் அனை­வ­ரும் ஏறிச்­செல்ல முடி­ய­வில்லை.

கடை­சி­யாக ஒரு ரயில், நிலை­யத்­திற்கு வந்து கத­வு­களைத் திறந்­தது. மக்­கள் முட்டிமோதி அதில் ஏறி­னர். ஆயி­ரக்­க­னக்­கான பெண்­களும் குழந்­தைக­ளு­டன் அந்த ரயிலும் நிரம்­பி­யது. லிவிவ்வை நோக்­கி ரயில் புறப்­பட்ட பிறகு இன்­ன­மும் ரயில் தாழ்­வாரத்தில் கூட்­டம் அதி­க­மாகவே இருந்­தது. அவர்­களும் மற்­றொரு ரயிலுக்காகக் காத்திருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!