மலேசிய எல்லைகள் விரைவில் திறப்பு; தாய்லாந்து, கம்போடியாவுக்கு ‘விடிஎல்’

கோலா­லம்­பூர்: மலே­சிய எல்­லை­கள் மறு­ப­டி­யும் திறக்­கப்­ப­டு­வ­தற்­கான தேதி அடுத்த வாரம் அறி­விக்­கப் பட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இவ்­வா­ரம் நடைெபற்ற கூட்­டத்­தில் எல்­லை­கள் திறப்­பது குறித்து அமைச்­ச­ரவை ஆலோ­சனை நடத்­தி­யது.

அப்­போது அடுத்த வாரம் எல்­லை­க­ளைத் திறக்க அமைச் சரவை ஒப்­பு­தல் அளித்­த­தாக சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­தார்.

பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் அது குறித்த தேதியை அடுத்த வாரம் அறி­விப்­பார் என்­றார் அவர்.

"சுற்­றலா மற்­றும் பய­ணத் துறையை உள்­ள­டக்­கிய வர்த்­த­கங்­க­ளுக்கு இந்த அறி­விப்பு முக்­கி­ய­மா­னது," என்று அவர் குறிப்­பிட்­டார்.

பெட்­டா­லிங் ஜெயா­வில் தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­தின் 16வது ரத்­தச் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தைத் தொடங்­கி­வைத்த பிறகு அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் இதனை தெரி வித்­தார்.

சுற்­றுலா, பய­ணத் துறை­யில் இடம்­பெற்­றுள்ள விமா­னச் சேவை, குடி­நு­ழை­வுத் துறை, ஹோட்­டல்­கள் மற்­றும் சம்­பந்­தப்­பட்ட துறை­களும் எல்­லை­கள் திறக்­கப்­ப­டு­வ­தால் பல­ன­டை­யும் என்று அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கான 'விடி­எல்' சிறப்­புப் பய­ணப் பாதையை மற்ற நாடு களுக்­கும் விரி­வு­ப­டுத்­து­வது குறித்து மலே­சிய அரசு ஆராய்ந்து வரு­கிறது.

தற்­போது மலே­சி­யா­வுக்­கும் சிங்கப்­பூ­ருக்­கும் இைடயே விடி­எல் திட்­டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அடுத்த கட்­ட­மாக அனைத்­துலக எல்­லை­களை மீண்­டும் திறக்­கும் கூட்டு முயற்­சி­யின் ஒரு பகுதி ­யாக மலே­சியா, தாய்­லாந்து, கம்­போ­டியா ஆகிய நாடு­களை உள்­ள­டக்­கிய 'விடி­எல்' பய­ணம் இம்­மா­தம் 15ஆம் தேதி தொடங்­கும் என்று மலே­சிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங் நேற்று அறி­வித்­தார்.

முழு­மை­யாக தடுப்­பூசி போட்டுக் கொண்ட பய­ணி­கள் குறிப்­பிட்ட பாதை­களில் தனி­மைப்­ப­டுத்­தல் இன்றி பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!