சிட்டிக்கு நெருக்கடி தரும் லிவர்பூல்

லண்­டன்: இபி­எல் பட்டத்தை வெல்வதற்கு முட்டி மோதும் லிவர்­பூல் குழு, நேற்­றைய ஆட்­டத்­தில் வெஸ்ட் ஹேம் குழுவை ஒரு கோல் வித்­தி­யா­சத்­தில் வென்­றது.

இதன் மூலம், தற்­போது முதலி­டத்­தில் உள்ள மான்­செஸ்­டர் சிட்­டிக்­குக் கடும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது லிவர்­பூல்.

ஆன்­ஃபீல்­டில் நடை­பெற்ற இந்த ஆட்­டத்­தில் அலெக்­சாண்­டர்-அர்­னால்ட் உதைத்த பந்தை வலைக்­குள் தள்ளி லிவர்­பூ­லின் வெற்றி கோலைப் போட்­டார் சாடியோ மனே.

இக்­கோல் முத­லில் 'ஆஃப்சைட்' என்று சந்­தே­கிக்­கப்­பட்­டது. பின்­னர் காணொளி உதவி நடு­வர் முறை­யின்­கீழ், கோலாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

லீக் போட்­டி­யில் லிவர்­பூ­லின் 7­வது தொடர் வெற்றி இது.

சிட்­டி­யை­விட ஒரு ஆட்­டம் குறை­வாக விளை­யா­டி­யுள்ள லிவர்­பூல், புள்­ளி­கள் இடை­வெ­ளி­யைத் தொடர்ந்து குறைப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் உள்­ளன.

இப்­போட்­டி­யில் கோல் போடு­வ­தற்­கான பல வாய்ப்­பு­க­ளைத் தவ­ற­­விட்­டது வெஸ்ட் ஹேம். எனவே, முதல் நான்கு இடங்­களில் ஒன்­றைப் பிடித்­து­வி­ட­லாம் என்ற வெஸ்ட்­ஹே­மின் நம்­பிக்­கைக்கு விழுந்த பேரி­டி­யா­கும் இந்த தோல்வி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!