உலகளவில் உணவு விலைகள் புதிய உச்சம்

சிங்கப்பூர்: உலக அள­வில் உணவு விலை­கள் பிப்­ர­வரி மாதம் உச்­சத்­தைத் தொட்­டன.

கடந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யு­டன் ஒப்­பி­டும்­போது இந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் உல­க­ளா­விய உணவு விலை­கள் 20.7 விழுக்­காடு கூடின.

தாவர எண்­ணெய், பால்­பொருள்­கள் போன்­ற­வற்­றின் விலை­கள் ஆக அதி­க­மாக உயர்ந்­தன என்று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் உணவு, வேளாண் அமைப்பு கூறி­யது.

உல­கி­லேயே அதிக அள­வில் வர்த்­த­கம் செய்­யப்­படும் உண­வுப்­பொ­ருள்­க­ளின் விலை­களை இந்த அமைப்பு கண்­கா­ணித்து வரு­கிறது.

கடந்த ஜன­வ­ரி­யில் இருந்­த­தை­விட பிப்­ர­வ­ரி­யில் உணவு விலை­கள் 3.9 விழுக்­காடு அதி­க­மா­கின.

விளைச்­ச­லும் ஏற்­று­ம­திக்கு ஏற்ற உண­வுப் பொருள்­களும் குறைந்­ததே பிப்­ர­வ­ரி­யில் உணவு விலை­கள் உயர்ந்­த­தற்கு முக்­கிய கார­ணம் என்று உணவு, வேளாண் அமைப்பு கூறி­யது.

உக்­ரே­னில் போர் மூளு­வ­தற்கு முன்­னர் திரட்­டப்­பட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் இவை. உக்­ரே­னிய போரால் உண­வுப் பொருள்­க­ளின் விலை­கள் மேலும் உயர்ந்­துள்­ளன.

உல­கின் 29 விழுக்­காட்டு கோது­மையை ரஷ்­யா­வும் உக்­ரே­னும் ஏற்று­மதி செய்­கின்­றன.

அதே­போல சோள ஏற்­று­ம­தி­யில் 19 விழுக்­காட்­டுப் பங்­கை­யும் சூரி­ய­காந்தி எண்­ணெய் ஏற்­று­ம­தி­யில் 80 விழுக்­காட்­டுப் பங்­கை­யும் அவை வகிக்­கின்­றன.

உக்­ரேன்-ரஷ்யா போரால் அந்­நா­டு­களில் இருந்து கோதுமை விநி­யோ­கம் பாதிப்­ப­டைந்­துள்­ள­தால், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­டம் இருந்து கோதுமை ஏற்­று­ம­திக்­கான தேவை இந்த வாரம் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் அது மேலும் உய­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் வர்த்­த­கர்­கள் கூறி­யுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!