உக்ரேன் போர்: ஆக அண்மை நிலவரம்

உக்ரேனில் ர‌ஷ்யப் படைகள் ஓயாமல் நடத்திவரும் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் சிக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நகர்களில் உணவு, குடிநீர், மின்சக்தி ஆகிய அத்தியாவசிய வசதிகள் இல்லாமல் பலர் தவிக்கின்றனர்.

நேரம் காலம் பாராமல், குடியிருப்பு வட்டாரங்களை ர‌ஷ்யப் படைகள் தாக்கிவருகின்றன. அதனால் தூக்கத்திலிருந்து விழித்து வீடுகளைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மக்கன் ஓடவேண்டியுள்ளது.

ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதலைத் தொடங்கி இரண்டு வாரங்களான நிலையில், இதுவரை உக்ரேனுக்குள் பெரியளவில் முன்னேறிச் செல்ல இயலவில்லை. அதனால், உக்ரேனிய நகர்கள், கிராமங்கள் மீது ர‌ஷ்ய இராணுவம் கண்மண் தெரியாமல் தாக்குதல்கள் நடத்திவருவதாக உக்ரேனிய அரசாங்கம் குற்றச்சாட்டியுள்ளது.

உக்ரேன் நிலவரம் பற்றி மேலும் சில அண்மைத் தகவல்கள்:

  • உக்ரேனிக் சுமி நகரில் மனிதாபிமானப் பாதையை அமைக்க உக்ரேனும் ர‌ஷ்யாவும் இணங்கியுள்ளதாக உக்ரேனிய துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார். இன்று அந்நகரிலிருந்து மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வெளியேறத் தொடங்குவர். ர‌ஷ்ய-உக்ரேன் எல்லையில் அமைந்துள்ள சுமி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்து இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் மாண்டனர்.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவைச் சூழ்ந்துள்ள ஆகப் பெரிய பூசலால் ஏறக்குறைய 1.7 மில்லியன் உக்ரேனியர்கள் அகதிகளாகிவிட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பிள்ளைகள் எனக் கூறப்பட்டது.
  • ர‌ஷ்யாவை எதிர்த்து உக்ரேன் சண்டையிட உதவ சுமார் 16,000 வெளிநாட்டினர் முன்வந்துள்ளதாக உக்ரேனிய அதிபர் தெரிவித்துள்ளார். போரில் சண்டையிட்ட அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என இருதரப்பிலிருந்தும் பலர் உக்ரேனுக்கு வர தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் வேலை பார்த்த பிரிட்‌டி‌ஷ் இராணுவப் படையைச் சேர்ந்த சில வீரர்கள் உக்ரேனைச் சென்றடைந்துள்ளனர்.
  • உக்ரேன்-ர‌ஷ்யப் பூசலால் ஏற்படக்கூடிய உணவு பாதுகாப்பு குறித்து ஜெர்மனி ஜி7 அமைப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது. ஜி7 நாடுகளைச் சேர்ந்து வேளாண் அமைச்சர்கள் அதில் கலந்துகொள்வர். உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, உணவுச் சந்தைகளை நிலைப்படுத்துவது பற்றி அமைச்சர்கள் பேசுவர்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!