குமுறிய மெராப்பி எரிமலை; பீதியில் வெளியேறிய கிராம மக்கள்

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் உள்ள மெராப்பி எரி­மலை நேற்று முன்­தி­னம் குமு­றி­ய­தில் அதைச் சுற்­றி­யுள்ள கிரா­மங்­களில் வசித்து வரும் 250க்கும் அதி­க­மா­னோர் பதற்­றத்­து­டன் வெளி­யே­றி­னர்.

எரி­ம­லைக் குழம்பு, சாம்­பல் ஆகி­ய­வற்றை மெராப்பி கக்­கி­ய­தாக இந்­தோ­னீ­சி­யா­வின் இயற்­கைப் பேரி­டர் நிர்­வாக அமைப்பு நேற்று தெரி­வித்­தது.

இந்­தோ­னீ­சிய நேரப்­படி நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு முதல் பின்­னி­ரவு

2 மணி வரை எரி­ம­லைக் குழம்பு கிட்­டத்­தட்ட ஐந்து கிலோ மீட்­டர் தூரம் வரை வடிந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

எரி­ம­லை­யைச் சுற்­றி­யுள்ள கிரா­மங்­களில் சாம்­பல் படர்ந்­தது. காய­ம­டைந்­தோர் குறித்து தக­வல்­கள் இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

எரி­மலை எந்நேரத்திலும் வெடிக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது. அதி­லி­ருந்து கூடு­தல் எரி­ம­லைக் குழம்பு, சாம்­பல் வெளி­யே­றும் அபா­யம் உள்­ள­தாக அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­த­னர். எனவே, எரி­ம­லை­யைச் சுற்றி 7 கிலோ­மீட்­ட­ருக்­குள் இருப்­ப­வர்­கள் உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யேற வேண்­டும் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

2,963 மீட்­டர் உய­ர­முள்ள மெராப்பி எரி­மலை, ஆகக் கடை­சி­யாக 2010ஆம் ஆண்­டில் வெடித்­தது.

அதன் கார­ண­மாக 350க்கும் மேற்­பட்­டோர் மாண்­ட­னர். இம்­முறை உயிர்ச் சேதத்­தைத் தவிர்க்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!