ர‌ஷ்யாவில் தாக்குதல்; உக்ரேனுக்கு எச்சரிக்கை

மாஸ்கோ: ர‌‌ஷ்­யா­வின் பெல்­கோ­ரோட் நக­ரில் உள்ள எரி­பொ­ருள் கிடங்கு மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலுக்கு உக்­ரேன்­தான் கார­ணம் என்று ர‌ஷ்யா சாடி­யது.

உக்­ரேன் மீதான ர‌ஷ்­யா­வின் தாக்­கு­தல் ஒரு மாதத்­தைக் கடந்து தொடர்ந்து வரு­கிறது. பல்­வேறு நாடு­க­ளின் ராணுவ ஆயு­தங்­கள் உத­வி­யு­டன் உக்­ரே­னும் தொடர்ந்து ர‌ஷ்­யாவை எதிர்த்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், உக்­ரேன் எல்­லை­யை­யொட்டி உள்ள ர‌ஷ்­யப் பகு­தி­யில் முதல்­மு­றை­யாக உக்­ரேன் தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

உக்­ரே­னின் ராணுவ விமா­னங்­கள், ர‌ஷ்­யா­வின் பெல்­கோ­ரோட்­டில் உள்ள எரி­பொ­ருள் கிடங்­கைத் தாக்­கி­ய­தாக அந்­ந­கர ஆளு­நர் வியா­செஸ்­லாவ் கிளாட்­கோவ் தக­வல் தெரி­வித்­துள்­ளார்.

ர‌ஷ்யா மீதான உக்­ரே­னின் இந்த வான்­வ­ழித் தாக்­கு­தல் அமை­திப் பேச்­சு­வார்த்­தைக்­குத் தடங்­கலை ஏற்­ப­டுத்­தும் என ரஷ்ய அர­சாங்­கத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் டிமெட்ரி பெஸ்­கோவ் கூறி­னார்.

ஆனால், தம்­மி­டம் ராணு­வத் தக­வல்­கள் இல்­லா­த­தால் உக்­ரேன் இத்­தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தாக வெளி­யான தக­வலை உறு­திப்­ப­டுத்­தவோ, மறுக்­கவோ முடி­யாது என்­றார் உக்­ரே­னின் வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரோ குலேபா.

உக்­ரேன் எல்­லையை ஒட்­டி­யுள்ள சில பகு­தி­களில் இருந்து மக்­கள் வெளி­யேற்­றப்­ப­டு­வ­தா­க­வும் பெஸ்­கோவ் சொன்­னார்.

ஏறத்­தாழ 170 பேர் எரி­பொ­ருள் கிடங்­கில் பற்றி எரி­யும் தீயை அணைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

நேற்று பகல்­வே­ளை­யில் பெல்­கோ­ரோட்­டில் மீண்­டும் ஒரு வெடிப்பு நிகழ்ந்­த­தாக செய்­தி­கள் வெளி­யா­கின.

இதற்­கி­டையே, ர‌ஷ்­யா­வி­டம் வாங்­கப்­படும் பொருள்­க­ளுக்­கான விலை ர‌ஷ்ய நாண­ய­மான ரூபலில் செலுத்­தப்­ப­ட­வேண்­டும் அல்­லது எரி­பொ­ருள் விநி­யோ­கம் ரத்து செய்­யப்­படும் என்று ர‌ஷ்யா காலக்­கெடு விதித்­தி­ருந்­தது. இந்­நி­லை­யில், நேற்று ஐரோப்­பா­விற்கு எரி­வாயு தொடர்ந்து செல்ல ர‌ஷ்யா அனு­ம­தித்­தது.

"ஏற்­கெ­னவே பணம் செலுத்­தப்­பட்ட விநியோகத்திற்கு ரூபல் நாணய உத்­த­ரவு பொருந்­தாது. மாதத்­தின் பிற்­பா­தி­யில் பணம் செலுத்­த­வேண்டி வரும்­போதுதான் இது சிக்­க­லா­கும்," என்­றார் பெஸ்­

கோவ்.

இதற்­கி­டையே, செர்னோ­பி­லில் இருந்து ர‌ஷ்­யப் படை­கள் திரும்­பப் பெறப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். ஆனால், அப்பகுதியல் உள்ள அணு உலை நிலை­யத்­தைச் சுற்றி இன்­ன­மும் சில ர‌ஷ்­யப் படை­கள் இருப்­ப­தாக உக்­ரேன் அதி­காரி ஒரு­வர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!