கோபத்தின் உச்சத்தில் மக்கள்; சமாளிக்கத் திணறும் சீனா

பெய்­ஜிங்: கிரு­மித்தொற்றை முற்­றி­லும் துடைத்­தொ­ழிக்­கும் முயற்­சி­யில் சீனா கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்றி வரு­கிறது. ஆனால், இது அந்­நாட்டு மக்­க­ளி­டையே கடுங்­கோ­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சில இடங்­களில் முடக்­க­நி­லையை எதிர்த்து மக்­கள் ஆர்ப்­பாட்­டங்­க­ளி­லும் ஈடு­பட்­ட­னர். மக்­க­ளின் கோபத்­தைச் சமா­ளிக்க முடி­யா­மல் திண­று­கிறது சீன அர­சாங்­கம்.

‌ஷாங்­காய் குடி­யி­ருப்பு வளா­கத்­தில் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தின் காணொளி ஒன்று சீனா­வின் சமூக ஊட­கத்­த­ளத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அது வேக­மாக பர­வி­ய­தை­ய­டுத்து, இந்த வாரத்­ தொடக்­கத்­தில் அக்­கா­ணொளி நீக்­கப்­பட்­டது.

ஷாங்­கா­யின் மின்­ஹாங் மாவட்ட குடி­யி­ருப்பு ஒன்­றில் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தில், நாங்கள் சாப்­பிட வேண்­டும், எங்­க­ளுக்கு சுதந்­தி­ரம் வேண்­டும் என்று ‌பலர் முழக்­க­மிட்­ட­தாக புளூம்­பர்க் செய்தி கூறு­கிறது.

அவர்­கள் மார்ச் 2ஆம் தேதி முதல் வீட்­டி­லேயே முடங்­கிக் கிடப்­ப­தா­க­வும் அவர்­க­ளுக்கு கிட்­டத்­தட்ட 10 முறைக்­கும் மேல் தொற்று பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் அக்­கு­டி­யி­ருப்­பின் சமூக ஊடக பக்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, ‌ஷாங்­கா­யின் கிழக்­குப் பகு­தி­யில் முடக்­க­நிலை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. குப்பைகளைக் கொட்டுவதற்குக்கூட யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. முடக்கநிலை, படிப்­படி­யாக தளர்த்­தப்­படும் என்று ‌ஷாங்காய் அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!