அணுவாயுதத்தைப் பயன்படுத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை

சோல்: வட­கொ­ரியா போரை எதிர்க்­கிறது என்­றா­லும் தென்­கொ­ரியா ராணுவ நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டாலோ அல்­லது தாக்­கு­த­லுக்கு திட்­ட­மிட்­டாலோ வட­கொ­ரி­யா­வின் அணு­வா­யுத படை­கள் தாக்­கு­தல் நடத்தும் என்று வட­கொ­ரிய தலை­வர் கிம் ஜோங் உன்­னின் சகோ­த­ரி­யும் அர­சாங்­கத்­தின் மூத்த அதி­காரியு­மான கிம் யோ ஜோங் கூறி­யுள்­ளார்.

வட­கொ­ரியா மீதான தாக்­கு­தல்­கள் பற்றி தென்­கொ­ரி­யா­வின் தற்­காப்பு அமைச்­சர் அண்­மை­யில் கூறி­யது மிகப் பெரிய தவறு என்று அவர் குறிப்­பிட்­டார்.

தென்­கொ­ரிய ராணு­வத்­தி­டம் பல்­வேறு வகை­யான ஏவு­க­ணை­கள் உள்­ளன என்­றும் அவை வட­கொ­ரி­யா­வின் எந்த இலக்­கை­யும் துல்­லி­ய­மாகவும் வேகமாகவும் தாக்­கக்­கூ­டி­யவை என்­றும் தென்­கொ­ரிய தற்­காப்பு அமைச்­சர் சென்ற வெள்­ளிக்­கி­ழமை கூறி­யி­ருந்­தார்.

இதற்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் பேசிய கிம் யோ யோங், "தென்­கொ­ரியா எங்­க­ளைச் சீண்­டி­னால் நிச்­ச­ய­மாக அணுவாயு தத்தைப் பயன்­ப­டுத்­து­வோம். எதி­ரி­கள் பேர­ழி­வைச் சந்­திப்­பார். அவர்­க­ளுக்கு அது பெருந்­து­ய­ராக அமை­யும்," என்று எச்­ச­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!