தற்காப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் ஜப்பான், பிலிப்பீன்ஸ்

தோக்­கியோ: தற்­காப்பு ரீதி­யான ஒத்­து­ழைப்பை விரி­வு­ப­டுத்த ஜப்­பா­னும் பிலிப்­பீன்­சும் ஒப்­புக்­கொண்­டுள்­ளன. உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெடுத்­தது, வட்­டார அள­வில் நில­வி­வ­ரும் பதற்­றம் ஆகி­ய­வற்­றின் மத்­தி­யில் இரு நாடு­களும் இந்த முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளன.

ஜப்­பான், பிலிப்­பீன்ஸ் ஆகி­ய­வற்­றின் வெளி­யு­றவு அமைச்­சர்­களும் தற்­காப்பு அமைச்­சர்­களும் ஜப்­பா­னி­யத் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் சந்­தித்­தனர். இரு நாடுகளும் அமெ­ரிக்­கா­வின் பங்­காளி நாடு­கள்.

ஒத்­து­ழைப்பை வளர்க்க வழி­வ­குக்­கும் நட­வடிக்­கை­களை மேம்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட அம்­சங்­கள் குறித்து இரு நாடு­களும் ஆலோசிக்­கும் என்று ஜப்­பா­னிய வெளி­யுறவு அமைச்­சர் யோஷி­மாசா ஹயாஷி தெரி­வித்­தார்.

கிழக்கு, தென் சீனக் கடல் பகு­தி­களில் சீனா­வின் நடத்­தை­யின் தொடர்­பில் அதற்­கும் இவ்­விரு நாடு­க­ளுக்­கும் இடையே கருத்­து­வே­று­பாடு இருந்து வரு­கிறது.

அதோடு, உக்­ரே­னில் ரஷ்­யா­வின் நட­வடிக்­கை­களும் வட­கொ­ரி­யா­வின் ஏவு­க­ணைச் சோத­னை­களும் இரு நாடு­க­ளுக்­கும் கவலை தரும் விவ­கா­ரங்­க­ளாக இருக்­கின்­றன. தங்­க­ளுக்கு இடையே உள்ள தற்­காப்பு ரீதி­யான உறவை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள 2015ஆம் ஆண்டு ஜப்­பா­னும் பிலிப்­பீன்­சும் ஒப்­பந்­தம் ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டன. அதற்­குப் பிறகு இரு நாடு­களும் பல கடற்­படை, ஆகா­யப் படை கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!