‘எங்கள் பயத்தை யாராலும் கற்பனை செய்யமுடியாது’

பெசிம்ன்னே: உக்­ரே­னின் மரி­ய­போல்­மீது ர‌ஷ்­யப் படை­கள் குண்­டு­மழை பொழிந்­த­போது, தாங்­கள் இருந்த பதுங்கு குழி­களில் கட்­ட­டத்­தின் இடி­பா­டு­கள் விழும்­போது தம் இத­யமே நின்­று­வி­டும்­போல் இருந்­த­தாக சொன்­னார் அசோவ்ஸ்­டல் எஃகு ஆலை­யில் இருந்து மீட்­கப்­பட்ட 37 வயது நடா­லியா என்ற பெண்.

பதுங்­கு­கு­ழி­களில் இருந்­த­போது தமக்­கி­ருந்த மன­நி­லை­யைப் பகிர்ந்­து­கொண்ட அவர், அவ்­வி­டங்­களில் பிரா­ண­வாயு எனும் ஆக்­சி­ஜன் இல்­லா­த­தை­யும் அங்கு பதுங்­கி­யி­ருந்த மக்­க­ளின் வாழ்க்­கை­யைப் பற்­றிய அச்­சத்­தை­யும் நினைவு கூர்ந்­தார்.

"பதுங்­கு­குழி ஆட்­டம் கண்­ட­போது, எனக்கு ஏற்­பட்ட பயத்தை வார்த்­தை­யால் சொல்­ல­மு­டி­யாது. பதுங்­கு­குழி உள்­வாங்­கிக்­கொள்­ளுமோ என்று கவ­லை­ய­டைந்­தேன்.

"பதுங்­கு­குழி ர‌ஷ்யப் படைகளின் தொடர் குண்­டு­வீச்­சு­களைத் தாங்­குமா என்று நான் மிக­வும் பயந்­து­போய் இருந்­தேன்.

"நீண்ட நாள்­க­ளாக நாங்­கள் சூரி­ய­னைப் பார்க்­க­வில்லை. பதுங்கு­கு­ழி­களில் நாங்­கள் அனு­ப­வித்த பயத்தை யாரா­லும் கற்­பனை செய்து பார்க்­க­மு­டி­யாது," என்­றார் அவர்.

ர‌ஷ்யப் படைகள் மரியபோலைக் கைப்பற்றிய பிறகு, அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில், பல வாரங்களாக சிக்கித் தவித்தவர்கள் கடந்த இரண்டு நாள்களாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

மரி­ய­போ­லில் உள்ள சில படை­களை ர‌ஷ்யா கிழக்கு லுஹான்ஸ்க் பகு­தி­யில் நிலை­நி­றுத்­து­வ­தாக உக்­ரேன் ராணு­வம் கூறு­கிறது.

இதற்­கி­டையே, ர‌ஷ்­யா­வில் மே 9ஆம் தேதி வெற்றி நாள் கொண்­டா­டப்­ப­டு­வ­தற்­கும் உக்­ரேன்­ மீ­தான தம் நாட்­டின் நட­வ­டிக்­கைக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என்­றும் கூறி­யுள்­ளார் ர‌ஷ்­யா­வின் வெளி­யு­றவு அமைச்­சர் செர்ஜி லாவ்­ரோவ்.

1945ல் நாசிப் படை­கள் சர­ண­டைந்­த­தை ர‌ஷ்யா ஆண்­டு­தோ­றும் வெற்றி நாளாக கொண்­டா­டு­கிறது. எனவே, இவ்­வாண்டு அந்த நாளுக்­குள் உக்­ரேன்­மீது ர‌ஷ்­யா­வின் படை­யெ­டுப்பு முடி­வுக்கு வரக்­கூ­டும் என்று யூகங்­கள் எழுந்த நிலை­யில் அவர் இவ்­வாறு விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!