சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெற போராடும் ஆர்சனல், டோட்டன்ஹம் குழுக்கள்

லண்டன்: சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துத் தொட­ருக்­குத் தகுதி பெறு­வ­தற்கு போட்­டிப்­போ­டும் நிலைக்கு டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் முன்­னே­றும் என்று தாம் நிர்­வா­கி­யா­கப் பொறுப்­பேற்­ற­போது யாரும் நினைத்­தி­ருக்­க­மாட்­டார்­கள் என்­றார் கோண்டே.

லெஸ்­டர் குழு­விற்கு எதி­ராக ஹேரி கேன் போட்ட ஒற்­றைக் கோலும் சன் ஹியூங் மின் போட்ட இரட்டை கோலும், ஸ்பர்சை 3-1 என்ற கோல்­க­ணக்­கில் வெல்­லச் செய்­தது. எனவே, சாம்­பி­யன்ஸ் லீக்­கிற்­குத் தகுதி பெறு­வ­தற்­கான வாய்ப்பு ஸ்பர்­சுக்கு அதி­க­ரித்­துள்­ளது.

"சாம்­பி­யன்ஸ் லீக்­கிற்­குத் தகுதி பெறு­வது என்­பது எளி­தான வி‌ஷ­யம் அல்ல. எங்­க­ளுக்கு அதிக நெருக்­கடி இருந்­தது.

"ஆனால், குழு­வின் ஆறு மாத கால முன்­னேற்­றத்தை அனு­ப­வித்து விளை­யா­டும்­படி வீரர்­க­ளி­டம் கூறி­னேன். ஸ்பர்ஸ் வீரர்­கள் நான்­கா­வது இடத்­திற்­குப் போட்­டி­போ­டத் தகு­தி­யா­ன­வர்­கள்," என்­று அவர் சொன்னார்.

அதன் பிறகு நடந்த ஆட்டத்தில் நான்­கா­வது இடத்­திற்­குப் போட்டி­போ­டும் மற்­றொரு குழு­வான ஆர்­ச­னல், வெஸ்ட் ஹேம்மை 1-2 என்ற கோல்­க­ணக்­கில் வென்­றது.

இத­னால், ஸ்பர்­சை­விட இரண்டு புள்­ளி­கள் அதி­கம் பெற்று, நான்­காம் இடத்தை மீண்­டும் பிடித்­து­விட்­டது ஆர்­ச­னல்.

"இன்று நாங்­கள் சிறப்­பாக விளை­யா­ட­வில்லை என்­றா­லும் வெற்றி மகிழ்ச்சி அளிக்­கிறது," என்­றார் ஆர்­ச­னல் நிர்­வாகி அர்­டேட்டா.

மற்றோர் ஆட்டத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கும் செல்சி, வெளியேறும் நிலையில் உள்ள எவர்ட்டனிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்றது.

இதனால், இபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் ஆபத்தை பெருமளவு தவிர்த்துள்ளது எவர்ட்டன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!