உக்ரேனுக்குக் கூடுதல் ராணுவ உதவி: பிரிட்டி‌ஷ் பிரதமர் 

உக்ரேனுக்கு உதவ கூடுதல் $300 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள ராணுவ உதவியை பிரிட்டன் அளிக்கவுள்ளது. அது குறித்த தகவல்களைப் பிரிட்டி‌ஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரேன் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பார்.

காணொளி வழியாக உக்ரேன் நாடாளுமன்றத்தில் திரு ஜான்சன் உரை நிகழ்த்துவார். வெளிநாட்டு தலைவர் உக்ரேன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல்முறை.

மின்னியல் போர் ஆயுதங்கள், இரவு பார்வை சாதனங்கள், ஜிபிஎஸ் சமிக்ஞைகளைத் தடைசெய்யும் கருவிகள், ஆளில்லா விமானங்கள் போன்ற பல இராணுவ உதவியைப் பிரிட்டன் வழங்கவுள்ளது. இதோடு, சண்டை தீவிரமடைந்து வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற சிறப்பு வாகனங்களையும் பிரிட்டன் உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு அளித்துவரும் ஆதரவை ர‌ஷ்ய அரசாங்கம் சாடியள்ளது. இத்தகைய நடவடிக்கை உக்ரேனுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையே உள்ள கலவரத்தை தூண்டிவிடுவதாக ர‌ஷ்யா எச்சரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!