உக்­ரேன்: மேலும் ஒரு ரஷ்ய போர்க் கப்­பலை அழித்­து­விட்­டோம்

கியவ்: 'ஸ்னேக் ஐலண்ட்' எனும் தீவிற்கு அருகே ஒரு ரஷ்ய போர்க் கப்­பலை அழித்­து­விட்­ட­தாக உக்­ரேன் கூறி­யுள்­ளது. ரஷ்­யா­வின் கட்­டுப்­பாட்­டில் உள்ள அந்­தத் தீவில் ரஷ்­யா­வின் ஏவு­கணைத் தற்­காப்பு முறை உள்­ளிட்­ட­வற்றைத் தனது ஆயுதம் தாங்கிய வானூர்தி ஒன்று அழித்­த­தாக உக்­ரேனின் தற்­காப்பு அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி இந்­தத் தாக்­கு­தல் குறித்து ரஷ்­யா­வின் தற்­காப்பு அமைச்சு தக­வல் ஏதும் வெளி­யி­ட­வில்லை. இம்­மாத தொடக்­கத்­தில் ஸ்னேக் தீவிற்கு அருகே ரஷ்­யா­வின் சுற்­றுக்­கா­வல் பட­கு­க­ளைத் தனது வானூர்­தி­கள் அழித்­த­தா­க­வும் உக்­ரேன் முன்­னதாக கூறி­யி­ருந்­தது.

உக்­ரே­னுக்கு உதவ 150 மில்­லி­யன் டாலர் மதிப்­பு­கொண்ட ஆயுத ஒப்­பந்தத்­தில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கையெ­ழுத்­திட்­டுள்­ளார்.

போர் தொடங்­கி­ய­தி­லி­ருந்து இது­வரை 3.4 பில்­லி­யன் டாலர் மதிப்­பு­ள்ள ஆயு­தங்­களை அமெ­ரிக்கா உக்­ரே­னுக்கு வழங்­கி­யுள்ளது.

இதற்­கி­டையே, மரி­ய­போல் நக­ரில் உள்ள எஃகு ஆலை­யி­லி­ருந்து மேலும் 50 பேர் வெளி­யேற்­றப்­பட்­ட­தாக ரஷ்ய ஆத­ர­வுப் படை­கள் தெரி­வித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!