நேப்­பாள மலை உச்­சியை நெருங்கிய ஆட­வர் மர­ணம்

காத்மாண்டு: உல­கின் மூன்­றா­வது உய­ர­மான சிக­ர­மான கஞ்­சன்­ஜங்­கா­வில் ஏறி­ய­போது இந்­திய மலை­யேற்ற வீர­ரான 52 வயது நாரா­ய­ணன் ஐயர் உயி­ரி­ழந்­தார்.

உல­கின் உய­ர­மான எட்டு சிக­ரங்­கள் நேப்­பா­ளத்­தில் உள்­ளன. அமை­தி­யான காற்று வீசும் வசந்­த­கால மலை­யேற்­றத்­திற்­காக நூற்­றுக்­க­ணக்­கான மலை­யே­றும் வீரர்­கள் இம­ய­ம­லைக்கு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், இந்­திய மலை­யேற்ற வீரர் நாரா­ய­ணன் ஐயர், கஞ்­சன்­ஜங்­கா­வில் வசந்­த­கால மலை­யேற்­றத்­தில் ஈடு­பட்­டி­ருந்­தார்.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று மலை உச்­சியை நெருங்­கிய நிலை­யில், கடல் மட்­டத்­தி­லி­ருந்து 8,200 மீட்­டர் உய­ரத்­தில் ஏறும்­போது அவர் உயி­ரி­ழந்­தார்.

8,586 மீட்­டர் உய­ர­முள்ள கஞ்­சன்­ஜங்கா மலையை ஏறு­வ­தற்­காக நேப்­பாள அரசு இவ்­வாண்டு 68 வெளி­நாட்டு மலை­யேற்ற வீரர்­க­ளுக்கு அனு­மதி அளித்­தி­ருந்­தது. அவர்­களில் பலர் வியா­ழக்­கி­ழ­மை­யன்று உச்­சியை எட்­டி­னர்.

நாரா­ய­ணன் ஐயர், இவ்­வாண்டு கஞ்­சன்­ஜங்கா மலை­யேற்­றத்­தின்­போது உயி­ரி­ழந்த மூன்­றா­வது வீர­ரா­வார். கடந்த மாதம், கிரீஸ் நாட்டு மலை­யேற்ற வீரர் ஒரு­வர், 8,167 மீட்­டர் உய­ர­முள்ள தவு­ள­கிரி மலை­யி­லி­ருந்து கீழே இறங்­கும்­போது உடல்­ந­லக்­கு­றை­வால் உயி­ரி­ழந்­தார்.

அதற்கு சில நாள்­க­ளுக்­குப் பிறகு நேப்­பா­ளத்­தைச் சேர்ந்த மலை­யே­றும் வீரர் ஒரு­வர் எவ­ரெஸ்ட் மலை­யில் இறந்த நிலை­யில் அடை­யா­ளம் காணப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!