எரிவாயு விலை ஏற்றத்தால் விமானச் சேவைகளை நிறுத்திய முதல் நாடு

விமான எரிவாயு விலைகள் அளவுக்கு அதிகமாக ஏறிவிட்டதால் நைஜீரியா அதன் விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளது.

எரிவாயு விலையேற்றத்தால் விமானச் சேவைகளை நிறுத்தி இருக்கும் முதல் நாடு அது.

விமான நிறுவனங்கள் அடுத்த அறிவிப்பு வரும்வரை நாடு முழுவதும் உள்ள விமானச் சேவைகளை நிறுத்தும் என்று விமான நிறுவனங்களின் சங்கம் கூறியது.

எரிவாயுக்கான அதிகச் செலவுகளை நான்கு மாதங்களாக ஏற்றுக்கொண்டதாகவும் இனி அப்படிச் செய்ய முடியாது என்றும் அவை கூறின.

மொத்தம் 23 விமான நிறுவனங்கள் விமானச் சேவைகளை நிறுத்த உள்ளன.

ஆனால் இபொம் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம் ஒன்று மட்டும் சேவைகளைத் தொடரப் போவதாகக் கூறியது.

வாடிக்கையாளர்களிடத்தில் தனக்கு பொறுப்பு உள்ளதாக அது சொன்னது.

ரஷ்ய உக்ரேன் போரின் தாக்கத்தால் ஒரு லிட்டர் எரிவாயு மும்மடங்குக்கும் மேல் அதிகரித்து 700 நைராவாக (2.33 சிங்கப்பூர் வெள்ளி) ஆனது.

ரஷ்ய உக்ரேன் போரைத் தவிர, சீனாவும் அது ஏற்றுமதி செய்யும் எண்ணெயைக் குறைத்துள்ளது.

அதே நேரம் விமானப் பயணங்கள் அடுத்த சில மாதங்களில் அதிகமாக உள்ளதால் விமான எரிவாயுவுக்கான உலகளாவியத் தேவை 30 விழுக்காட்டுக்கும் மேல் உயரவுள்ளது.

நாள் ஒன்றுக்கு ஆறு மில்லியன் பீப்பாய் விமான எரிவாயு தேவைப்படும் என்று புளும்பெர்ன் என்ஈஎஃப் முன்னுரைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!