மனிதக் கழிவைச் சாப்பிடும்படி கூறிய தாய்லாந்து ஆடவர் கைது

பேங்காக்: சக்தி வாய்ந்த சமயகுரு என்று தம்மைக் கூறிக்கொண்ட தாய்லாந்தின் 74 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாவீ எனும் அவரின் முகாமில் 11 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தின் சைய்யபும் மாநிலத்தில் உள்ள காட்டில் அவரது முகாம் இருந்தது.

தமது 80 வயது தாயைக் காணவில்லை என்று பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அவர் சிக்கினார். அந்த முகாமில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களில் புகார் அளித்த பெண்ணுடைய தாயின் சடலமும் இருந்தது.

மேலும் தம்மை நம்புபவர்கள், மனிதக் கழிவையும் சிறுநீரையும் தலையில் இருந்த பொடுகையும் சாப்பிடும்படியும் உத்தரவிட்டு வந்துள்ளார். தாவீ தங்கள் நோய்களைக் குணப்படுத்தக்கூடிய 'கடவுளான தந்தை' என்று நம்புவதாக அவர்கள் கூறினர்.

நீ ஏன் 'கடவுளான தந்தை' என்று போலிசார் தாவீயைக் கேட்டதற்கு, "நானா சொல்லி கற்பித்தேன்? அவர்கள் நம்பி ஏற்றார்கள்," என்று அவர் ஒரே போடாக போட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!