அமெரிக்காவில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
இதன்படி ஒவ்வொரு 327 அமெரிக்கர்களுக்கு ஒருவர் மாண்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியது.
ஒரு காலகட்டத்தில் அமெரிக்காவில் இத்தனை பேர் மரணமடைவர் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அந்நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை, சான் ஃபிரான்சிஸ்கோ, சியேட்டல் நகரங்களின் மக்கள்தொகையைவிட அதிகம்.