ஆஸ்திரேலியா, சுவீடன், பிரான்சில் பரவியுள்ள குரங்கம்மை

ஐரோப்பாவில் அண்மையில் காணப்பட்ட குரங்கம்மைத் தொற்று தற்போது வடஅமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பரவி உள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா, சுவீடன் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் குரங்கம்மை தொற்றுச் சம்பவங்களை உறுதி செய்துள்ளன.

பிரான்சும் இத்தாலியும் தங்கள் நாடுகளில் முறையே ஒருவருக்கு குரங்கம்மை இருப்பதாக அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

ஐரோப்பாவிலிருந்து திரும்பிய ஆஸ்திரேலியர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்றியுள்ளதாக அந்த நாடு வெள்ளிக்கிழமை அன்று உறுதிப்படுத்தியது.

ஸ்டாக்ஹோமில் ஒருவருக்கு கிருமி தொற்றியுள்ளதாக சுவீடன் உறுதி செய்தது.

கனடாவில் இருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது.

கனடாவின் கியூபெக் மாநிலத்தில் 17 பேருக்கு குரங்கம்மை தொற்றிய சந்தேகம் இருப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாள்களில் ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா ஆகிய நாடுகளில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் வழக்கமாக காணப்படும்.

அது சின்னம்மையைப் போன்ற அரிய தொற்றுநோய். ஆனால் சின்னம்மையைவிட அதன் தாக்கம் சற்று குறைவு.

காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் சொறி போன்றவை இந்த தொற்றுநோயின் அறிகுறிகள்.

குரங்கம்மை மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது என்றும் அது தொற்றினால் பெரும்பாலும் சில வாரங்களில் குணமடைந்துவிடலாம் என்றும் அதிகாரிகள் இதுவரை கூறி வந்துள்ளனர்.

ஆனால் வரும் வாரங்களில் குரங்கம்மை மேலும் பரவலாம் என்று உலகச் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பெரும்பாலும் பாலியல் உறவு, குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்களிடையிலான பாலியல் உறவு வழியாக குரங்கம்மை பரவுவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!