அமெரிக்கச் சிறுவர்களின் மரணத்துக்குத் துப்பாக்கியே முதன்மை காரணம்

அமெரிக்காவில் 19 வயதுக்குக் குறைந்த சிறுவர்களின் மரணங்களுக்குத் துப்பாக்கிச் சூடு முதன்மை காரணம் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

2020ல் 19 வயதுக்குக் குறைந்த 4,368 சிறுவர்களும் இளையர்களும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உயிரிழந்தனர். ஒப்புநோக்க 4,063 சிறுவர்களும் இளையர்களும் வாகன விபத்தில் மாண்டனர். வாகன விபத்துகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகச் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் துப்பாக்கிச் சூடு மரணங்கள் உயர்ந்துள்ளன.

பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் சட்ட, காவல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டவை எனக் கூறப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் பெரும்பாலும் ஆப்பிரிக்க சிறுவர்களும் இளையர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கப் பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்க சிறுவர்கள் துப்பாக்கிச் சூட்டால் மடியும் சாத்தியம் நான்கு மடங்கு அதிகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!