மலே­சி­யா­வில் இரு மாதங்­களில் ஒரு மில்­லி­யன் சுற்­றுப்­ப­ய­ணி­கள்

புக்­கிட் ஜெலுத்­தோங் (மலே­சியா): கடந்த ஏப்­ரல் மாதம் ஒன்­றாம் தேதி­யி­லி­ருந்து சுமார் ஒரு மில்­லி­யன் சுற்­றுப்­ப­ய­ணி­கள் மலே­சி­யா­விற்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் சுற்­றுப்­ப­ய­ணத் துறை அமைச்­சர் நேன்சி ஷுக்ரி தெரி­வித்­துள்­ளார். அன்­று­தான் மலே­சியா அதன் எல்­லை­க­ளைத் திறந்­து­விட்­டது.

'மலே­சியா ட்ரூலி ஏஷியா 2022' எனும் இயக்­கத்­தின்­கீழ் இரண்டு மில்­லி­யன் சுற்­றுப்­ப­ய­ணி­களை வர­வேற்­கும் இலக்கை மலே­சியா கொண்­டுள்­ளது. அந்த இலக்­கின் பாதிக் கட்­டத்தை அடைந்­து­விட்­ட­தாக திரு­வாட்டி நேன்சி சொன்­னார்.

"கடந்த இரண்டு மாதங்­க­ளா­கப் பதி­வான சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் எண்­ணிக்­கை­யைப் பார்க்­கும்­போது சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மட்­டுமே கிட்­டத்­தட்ட 600,000 பேர் இங்கு வந்­துள்­ள­னர்.

"ஜப்­பான், இந்­தியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்­தும் கூடு­த­லான பய­ணி­கள் வருகை தரு­வர் என்ற நம்­பிக்­கை­யைக் கொண்­டுள்­ளோம்," என்று திரு­வாட்டி நேன்சி, சிலாங்­கூர் மாநி­லத்­தில் உள்ள புக்­கிட் ஜெலுத்­தோங் பகு­தி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் மலே­சி­யா­வில் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால் பய­ணி­கள் அந்­நாட்­டிற்கு வர விரும்­பு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். பய­ணி­க­ளுக்­கான தனிமை உத்­த­ரவு விலக்­கப்­பட்­டுள்­ள­தை­யும் கொவிட்-19 பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளத் தேவை இல்­லா­மல் போன­தை­யும் அவர் சுட்­டி­னார்.

பய­ணி­கள் கொவிட்-19 காப்­பு­று­தித் திட்­டங்­களை வைத்­தி­ருக்­கத் தேவை­யில்லை என்­ப­தை­யும் அவர் குறிப்­பிட்­டார். மலே­சி­யா­வில் வெளிப்­பு­றங்­களில் முகக்­க­வ­சங்­களை அணி­ய­வும் வேண்­டாம்.

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­தற்கு முன்பு 2019ஆம் ஆண்டு மலே­சி­யா­விற்கு 26.1 மில்­லி­யன் சுற்­றுப்­ப­ய­ணி­கள் வருகை தந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!