ஒரு மில்லியன் மெர்செடிஸ் வாகனங்கள் திரும்பப் பெறப்படும்

உலகளவில் ஒரு மில்லியன் மெர்செடிஸ் வாகனங்கள் திரும்பப் பெறப்படும் என மெர்சடிஸ்-பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களில் பிரக் எனப்படும் வாகனம் நிறுத்தும் கருவியில் பிரச்சினை இருப்பதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட வாகனங்கள் 2004க்கும் 2015க்கும் இடையே தயாரிக்கப்பட்ட எம்எல், ஜிஎல் ரக எஸ்யூவி வாகனங்கள், ஆர்-கிளாஸ் சொகுசு வேன் ஆகியவை என தெரிவிக்கப்பட்டது.

உலகெங்கும் 993,407 வாகனங்களும், ஜெர்மனியிலிருந்து 70,000 வாகனங்களும் திருப்பி பெற்றுக்கொள்ளப்படும்.

வாகனத்தை நிறுத்தும் கருவி பழுதடைந்தால் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம். இதனால் விபத்து நடக்கக்கூடும்.

பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களை உடனடியாகத் தொடர்புகொண்டுவருவதாக நிறுவனம் தெரிவித்தது. சோதனை மேற்கொள்ளும்வரை வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று நிறுவனம் வலியுறுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!